(எம்.மனோசித்ரா)

அம்பாந்தோட்டை துறைமுகம் முதற்கொண்டு விமான நிலையம் என பல தேசிய சொத்துக்ளை வெளிநாடுகளுக்கு விற்று முடித்துவிட்டார்கள். அவை மாத்திரமல்ல அவற்றுடன் அவை அமைந்துள்ள சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பையும் சேர்த்து தான் விற்றுள்ளார்கள். இதனை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்டால் பொலிஸாரை கொண்டு   தாக்குகின்றர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , கடந்த தேர்தலில் இவ்வாறு பொய் கூறியே மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால் இம்முறை அவ்வாறு மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

Image result for மஹிந்த ராஜபக்ஷ virakesari

அம்பாந்தோட்டையில் நேற்று இடம் பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.