அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள கார் கழுவும் நிலையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கார் கழுவும் நிலையத்தில் நேற்று  இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். இதன்போது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவருக்கு காலில் காயமேற்பட்டுள்ளதாகவும் அப் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.