அவுஸ்தி ரேலிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் பெண்கள் ஒற்­றையர் பிரிவில் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் டென்மார்க் வீராங்­கனை கரோலின் வோஸ்­னி­யாக்கி சம்­பியன் பட்­டத்தை வென்றார்.

அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்­றையர் பிரிவில் நடை­பெற்ற பர­ப­ரப்­பான இறுதிப் போட்­டியில் டென்மார்க் வீராங்­கனை கரோலின் வோஸ்­னி­யாக்கி 7–-6 (7–-2), 3–-6, 6–-4 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை (ருமே­னியா) வீழ்த்தி முதன்முறை­யாக கிராண்ட்ஸ்லாம் பட்­டத்தை உச்­சி­மு­கர்ந்தார். 

டென்மார்க் நாட்­டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் ஒற்­றையர் பட்­டத்தை வென்­றி­ருப்­பது இதுவே முதன்முறை­யாகும்.இவ்வெற்­றியின் மூலம் வோஸ்­னி­யாக்கி, தர­வ­ரி­சையில் மீண்டும் முத­லி­டத்­திற்கு முன்­னே­றினார். 

60 கோடி ரூபாவை பரி­சுத்­தொ­கை­யாக அள்­ளிய 27 வய­தான வோஸ்­னி­யாக்கி கூறு­கையில், ‘இந்த தரு­ணத்­துக்­காகத் தான் பல ஆண்­டு­க­ளாக கனவு கண்டேன். அந்த கனவு இப்­போது நன­வாகி இருக்­கி­றது’ என்றார். 

இதேவேளை இரண்டா மிடத்தைப் பெற்ற சிமோனா ஹாலெப் 30 கோடி ரூபா பணப்பரிசை பெற்றுக்கொள்கிறார்.