மிக் - 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மோசடி தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும், நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் (எப்.சி.ஐ.டி.), அந்த விவ­கா­ரத்தின் பிர­தான சந்­தேக நப­ரான முன்னாள் ரஷ்­யா­வுக்­கான தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் இரு வங்­கிக்­க­ணக்­கு­க­ளுக்கு  வைப்­பி­லி­டப்­பட்ட பெருந் தொகை பணத்தை கண்­டு­பி­டித்­துள்­ளனர். 

கோட்டை நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமை­வாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி வைத்­தி­யலங்­கா­ரவின் மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கே.டி.பிரி­யந்­தவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக இரண்டாம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஹால் பிரன்சிஸ் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த நிதி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இரு தனியார் நிதி நிறு­வ­னங்­களில் உள்ள உத­யங்­கவின் கணக்­கு­க­ளுக்கே இந்த நிதி­யா­னது, லத்­வியா, சைப்ரஸ், ஐக்­கிய அரபு இராச்­சியம், மாஷல் தீவுகள், ரஷ்யா, பனாமா மற்றும் அமெ­ரிக்­காவில் இருந்து வெவ்

­வேறு நபர்கள், நிறு­வனங்­களால் வைப்­பி­டப்­பட்­டுள்­ளமை நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பணத்­தொகை உத­யங்­கவின் கணக்கில் இவ்­வாறு வைப்­பிலி­டப்­பட்­ட­மையை சந்­தே­கத்­துக்கு இட­மான கொடுக்

கல் வாங்­க­லாக கருதும் நிதிக் குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வினர் அதன் பிர­கா­ரமே, அந்த நிதியின் ஊடாக கொள்­வ­னவு செய்­யப்­பட்ட உத­யங்­கவின் சொத்­துக்­களை நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமைய கடந்த வாரம் தடை செய்­த­தாக நிதிக் குற்றப் புல­ன­ய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் இந்த சந்­தே­கத்­துக்கு இட­மான பண வைப்­புகள் தொடர்பில் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்­ற­வியல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான பரஸ்­பர தகவல் பரிமாற்றுச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் தக­வல்­களைப் பெற்று மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி லத்­வியா, சைப்ரஸ், ஐக்­கிய அரபு இராச்­சியம், மாஷல் தீவு

கள், ரஷ்யா, பனாமா மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­களின் புல­ன­ாய்வுப் பிரி­வு­க­ளுக்கு இது தொடர்பில் தகவல் கோரும் எம்.எல்.

ஏ.கடிதம்  அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ளது.

அந்த கடி­தத்தின் பிர­காரம் அவ்­வந்த நாடு­களில் இருந்து உத­யங்­கவின் வங்­கிக்­க­ணக்கு பணம் வைப்­பி­லிட்ட நிறு­வனம், தனி

நபர்கள் தொடர்பில் பதி­ல­ளிக்­கப்­பட்ட பின்னர் அடுத்த கட்ட விசா­ரணை தொடர்

பில் நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரி­வினர் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி, நீதி­மன்றில் பெற்­றுக்­கொண்ட உத்­த­ர­வுக்கு அமைய உத­யங்­கவின் சொத்­துக்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­போதே இந் நாட்டின் தனியார் நிதி நிறு­வனங்கள் இரண்டில் உத­யங்­க­வுக்கு சொந்­த­மான நிதி இருந்­துள்­ள­துடன் அவை மீளப் பெறப்­பட்டு அவை ஊடாக தொம்பே, பொரளை பகு­தி­களில்  சொத்­துக்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கம்­பஹா - தொம்பே பகு­தியில் உள்ள இரு காணி­க­ளுடன் கூடிய சொத்­துக்கள், பொரளை - எல்­விட்­டி­கல மாவத்­தையில் உள்ள தொடர்­மாடி குடி­யி­ருப்பு ஆகிய சொத்­

துக்­களே இவ்­வாறு கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளமை பொலி­ஸாரால் கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­தது. 

அதன்­ப­டியே தொம்பே பகு­தியில் உள்ள உத­யங்­க­வுக்கு சொந்­த­மான 40 மில்­லியன் ரூபா பெறு­மதி கொண்ட காணி மற்றும் சொத்­துக்கள், அதே பகு­தியில் உள்ள 1.2 மில்­லியன் பெறு­ம­தி­யி­லான காணி மற்றும் சொத்­துக்கள் ஆகி­யற்றை தடை செய்து நீதி­மன்றம் நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் கோரிக்­கைக்கு அமைவாக  கம்பஹா காணி பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் பொரளை எல்விட்டிகல மாவத்

தையில், ட்ரிலியன்ட் ரெசிடன்ஸி எனும் தொடர்மாடி குடியிருப்பில் 2பீ எப் 6பி 3 எனும்153/06/6/3 ஆம் இலக்க, 23.731 மில்

லியன் ரூபா பெறுமதியான தொடர்மாடி வீடு மற்றும் அதில் உள்ள சொத்துக்களை தடைச் செய்து கொழும்பு காணிபதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.