நல்­லாட்சி அர­சாங்­கத்தில் சில நபர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் இர­க­சிய ஒப்­பந்­த­ங்களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இவர்­களின் டீலை  உட­ன­டி­யாக நாம் நிறுத்­துவோம் என பாரிய நகர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

Image result for champika ranawaka virakesari

மஹிந்த ராஜபக் ஷவினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பாரிய நிதி மோச­டிகள் கார­ண­மாக அவ­ரது பிர­ஜா­வு­ரி­மையை பறிப்­ப­தற்கு   கலந்­தா­லோ­சித்து வரு­வ­தா­க வும் அவர் குறிப்­பிட்டார். 

ஐக்­கிய  தேசியக் கட்­சியின் தேர்தல் பிர­சார கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

கடந்த காலங்­களில் மிகவும் மோச­ மான வகையில் இருந்த ஊழல் வாத அர­சியல் செயற்­பா­டுகள் இன்று நாட்டில் இல்லை. எமது நாடு இன்று மிகவும் நேர்­மை­யான, தூய்­மை­யான பயணம் ஒன்றை முன்­னெ­டுத்து செல்­கின்­றது. இதில் மனித உரி­மைகள், ஜன­நா­யகம், சுதந்­திரம் என அனைத்தும் பாது­காக்­கப்­ப­டு­வ­துடன்   எமது மக்கள் இந்த நாட்டில் சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய சூழலை நாம் உரு­வாக்­கி­யுள்ளோம். 

இன்று நாம் தேர்தல் ஒன்­றுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்றோம். இது வும் மிகவும் ஜன­நா­யக ரீதி­யி­லான தேர் தல் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. முன்­னைய ஆட்­சி­யிலும் 11 ஆண்­டுகள் நான் அமைச்­ச­ராக இருந்­துள்ளேன்.மஹிந்த ராஜபக் ஷ எவ்­வாறு தேர்­தலை நடத்­துவார்  என எனக்கு நன்­றா­கவே தெரியும். தேர்­த­லுக்கு ஒரு மாதத்­திற்கு முன்­னரே திறை­சே­ரியில் உள்ள நிதியை தன்­வ­சப்­ப­டுத்தி  பஸில், கோத்­த­பாய ராஜபக் ஷக்­களின் மூல­மாக பிரித்து தமது அர­சி­யலை கையாள்­வார்கள். 

அரச அதி­கா­ரி­களின் மூல­மாக தமது பிர­சார செயற்­பா­டுகள் அனைத்­தையும் முன்­னெ­டுப்­பார்கள். எனினும் இன்று அவ்­வாறு ஒன்றும் செய்ய முடி­யாது. தேர்தல் சட்­டங்­களை மீறும் எந்­த­வொரு செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுக்க முடி­யாது. 

கடந்த கால ஊழல் குறித்த அறிக்­கைகள் இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தின் 27 முக்­கிய ஊழல் குற்­றங்கள் பதி­வா­கி­யுள்­ளன. ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு மூல­மாக இவற்றை கண்­ட­றிந்து சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

இதில் அரச ஊடகம்  ஒன்றில் நிதி வழங்­கப்­ப­டாது தமக்­கான அர­சியல்  பிர­சார செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த மிகப்­பெ­ரிய ஊழல் குற்­றத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­பட வேண்டும் என்­பதே முன்­வைக்­கப்­பட்­டுள்ள யோச­னை­யாகும். மிகப்­பெ­ரிய ஊழல் வாதி­க­ளுக்கு நாட்டில் இடம் இல்லை. அவர்­கள் கடு­மை­யாக தண்­டிக்­கப்­பட வேண்டும். அத­னையே நாம் அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு தெரி­வித்து வரு­கின்றோம். 

மேலும் இந்த அர­சாங்­கத்தில்  உள்ள சிலர் மஹிந்த ராஜபக் ஷவுடன் இர­க­சிய ஒப்­பந்­தங்­களை செய்ய முயற்­சித்து வரு­கின்­றனர். மஹிந்த ராஜபக் ஷவிற்கும் அர­சாங்­கத்தில் சில­ருக்கும் டீல் உள்­ளமை எமக்கு தெரிய வந்­துள்­ளது. இத­னையும் நாம் உட­ன­டி­யாக நிறுத்­துவோம். இவர்­க­ளுக்கு எதி­ராக உடனடியாக நாம் நடவடிக்கை எடுப்போம். அதேபோல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரிய ஊழல் மோசடி குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.