எம்மை திட்­டு­பவர்­க­ளுக்கு திட்டம் இல்லை. எம்மை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு பணம் இல்லை. எம்­மி­டமே அனைத்து அமைச்­சு­க­ளும் உள்­ளன. மத்­திய வங்கி பிணை­முறி தொடர்பில் எமக்கு மறைப்­ப­தற்கு ஒன்றும் இல்லை. நாம் பய­மில்­லாமல் அனைத்து சவா­லையும்   எதிர்­கொள்ள தயா­ராக உள்ளோம். இதன்­ப­டியே விவா­தத்­திற்­கான திக­தியை அறி­வித்தேன். ஆகவே நாங்கள் விவா­தத்­திற்கு தயா­ராக உள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் தேசிய அர­சாங்கம் பய­ணிக்கும். ஆகவே யாரும் அச்சம் கொள்ள தேவை­யில்லை. அத்­துடன் கடன் மீள பெறாமல் இருக்­கவும் கடன் முகா­மைத்­துவம் செய்­யவும் புதிய சட்­ட­மூ­ல­மொன்றை கொண்டு வர­வுள்ளேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

 கேகா­லையில் நேற்று நடை­பெற்ற  தேர்தல்  பிர­சாரக்  கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது எம்மை பலரும் விமர்­சிக்­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீது வீணான பழி­சு­மத்­து­கின்­றனர். எம்மை திட்­டு­பவர்­க­ளுக்கு திட்டம் இல்லை. எம்மை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு பணம் இல்லை. எம்­மி­டமே முக்­கி­ய­மான அமைச்­சுகள் உள்­ளது. விமர்­சனம் செய்­பவர்கள் கிரா­மத்­திற்கு திட்டம் இல்­லாமல் வரு­கின்­றனர். வட்­டா­ரத்­திற்கு வந்து பேசு­வ­தற்கு அவர்­க­ளுக்கு ஒன்றும் இல்லை. கிராம ஆட்­சியை உரு­வாக்கும் தேர்தல் என்­ப­தனை அறி­யாத அர­சியல் கட்­சிகள் செயற்­ப­டு­கின்­றன. எனவே கிரா­மத்தை யாரால் கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் மாத்­தி­ரமே கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

தற்­போது பாரா­ளு­மன்ற அமர்வை கூட்­டு­வது தொடர்பில் பேசு­கின்­றனர். பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திக­திக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தை கூட்டும் அதி­காரம் எனக்கே உள்­ளது. மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் விவாதம் கோரினேன்.

நான் அதற்கும் சந்­தர்ப்பம் வழங்­கினேன். இந்­நி­லையில் தற்­போது ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கை­யையும் விவா­திக்க சந்­தர்ப்பம் கோரு­கின்­றனர். இது தொடர்­பாக அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி என்­னிடம் பெப்­ர­வரி 10 ஆம் திக­திக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­மாறு கோரிக்கை விடுத்தார்.

 பெப்­ர­வரி 8 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வது தொடர்பில் நான்  நேற்று இரவு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை சந்­தித்து பேசினேன். எனவே நாம் விவா­தத்­திற்கு தயா­ராக உள்ளோம். எமக்கு மூடி மறைப்­ப­தற்கு ஒன்றும் இல்லை. நாம் பய­மில்­லாமல் அனைத்து சவாலையும் எதிர்­கொள்ள தயா­ராக உள்ளோம்.

2014 ஆம் ஆண்டு போன்று அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலைகள் அதி­க­ரிக்­க­வில்லை. அத்­துடன் நாம் நிவா­ர­ணத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் வழங்­கினோம். 

 எமக்கு எதி­ராக கூட தீர்ப்­புகள் ஊட­கங்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி யையே விமர்­சிக்­கின்­றன. மக்கள் கூட்­ட த்தை தொலைக்­காட்­சியில் காண்­பிப்­பது,   ஒளிபரப்புவது கிடை­யாது. அவர்­க­ளுக்கு இந்த கூட்­டத்தை ஒளிபரப்புவது பய­மா கும்.

நாம் நாட்டின் வரு­மா­னத்தை  அதி­க­ரித்தோம். கடனை அடைக்க நாம் கடன் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. கடன் மீள பெறாமல் இருக்­கவும் கடன் முகா­மைத்­துவம் செய்­யவும் புதிய சட்­ட­மூ­ல­மொன்றை கொண்டு வர­வுள்ளேன். கடனை பொறுப்­பேற்க இளை­ஞர்­க­ளுக்கு விருப்­பமா? இதன்­படி அடுத்த தலை­மு­றைக்கு நாம் கடனை சுமத்த மாட்டோம். தொழில்­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்த பாரிய திட்­டங்கள் வகுத்­துள்ளோம். 4 இலட்சம் தொழில்­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். ஏற்­று­மதி வரு­மா­னத்தை நாம் அதி­க­ரித்­துள்ளோம். இதுவும் போதாது இதனை விட தரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுள்ளோம்.

கண்டி முதல் அம்பாந்தோட்டை வரை ஒரு அதிவேக வீதி கட்டமைப்பை ஏற்படுத்தவுள்ளோம். மத்தள விமான நிலையத்தையும் ஆகஸ்ட் மாதம் குத்தகைக்கு வழங்கவுள்ளோம்.  அத்துடன் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் தேசிய அர சாங்கம் பயணிக்கும். ஆகவே யாரும் அச் சம் கொள்ள தேவையில்லை என்றார்.