எனது சவாலை   ஏற்று  எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்ற த்தை கூட்டி பிணைமுறி  விவாதத்தை  நடத்த முன்வந்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற கூட்த்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

 தேர்தலுக்கு முன்னர் பினைமுறி விவகாரம் தொடர்பில் முடியுமான விவாதம் நடத்துமாறு நான் சில தினங்களுக்கு முன்னர் சவால் விட்டிருந்தேன். அந்த வகையில் தற்போது பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டு, விவாதம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். நான் கூறியதால்தான் பாராளுமன்றம் கூட்டப்படுகிறது. இது நல்லதொரு பண்பாகும். இந்த விவாதத்தின் போது எல்லோருடைய விடயங்களும் வெ ளியில் வரும் என்றார்.