முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நிதி மோசடி செய்தமை மற்றும் ஊழலுக்கு துணை போனமை தொடர்பில் ஆணைக்குழுவின் விசார ணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Image result for அஜித் பீ.பெரேரா virakesari

 எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையினை இரத்து செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மீண்டும் நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டு தேசிய சொத்துக்களை அழிக்காமல் இருப்பதற்கு  மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்படும் தண்டனை முன்மாதிரியாக அமைய வேண்டும். இதற்காக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மின்வலு புத்தாக்க சக்திவலு அமைச்சில் நேற்று ஞாயிற்றுக்கிiமை இடம் பெற்ற விசேட ஊடகவவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறுத் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

2015ஆம்ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பொழுது சுயாதின தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிதி தொகையினை செலுத்தாமை   தொடர்பிலும் அதன் காரணமாக தேசிய அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பிலும்   சுயாதின விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட  தரப்பினருக்கு எதிரான அறிக்கையினை கடந்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளமை விசேட அம்சமாகும்.

18 விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட 34தொகுதிகள் அடங்கிய விசாரணை அறிக்கையில் குறித்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை   மேற்கொள்ள ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டது. ஆணைக்குழுவின் விசாரணையின் பிரகாரம் 6 வது தரப்பினரான முன்னாள் ஜனாதிபதியின் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பிரதானமாக கருதப்படுகின்றன.

2015 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது சுயாதின தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக திட்டங்களை தமது சுய விருப்பு வெறுப்பிற்கு பயன்படுத்தியதுடன் ,பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களை ஒளிப்பரப்புவதற்கு இடையூறு விளைவித்தமை பிரதான குற்றங்களாகவும்  , நிதி மோசடியாகவும் கருதப்படுகின்றன.

 தற்போது நாட்டின் அரசியல் நிலமை குறித்து நாட்டு மக்கள் மத்தியில் பலவிதமான மாறுப்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஊழல்குற்றச்சாட்டுக்கள் சட்டத்தின் பிரகாரம் நிருபிக்கப்பட்டால் 7வருட பிரஜாவுரிமை இரத்து செய்யும் சட்ட மூலம் இலங்கை அரசியலமைப்பில் காணப்படுவதுடன், கடந்த கால எடுத்துக்காட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன.

பாரிய ஊழல் குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு சுயாதினமானதாகவே செயற்படுகின்றது. பக்கச்சார்பன்றி நடுநிலையாகவே செயற்படுவகினறது. பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் சாட்சியம் அளித்தமை சிறந்த  ஒரு எடுத்துக்காட்டாகவே காணப்படுகின்றது.

அதிகார வரம்பினை மீறி செயற்படும் ஆட்சியாளருக்கு தற்போது நடைமுறையில் காணப்படும் சட்டம் போதுமானதல்ல .தேசிய சொத்துக்களை மோசடி செய்தவர்களுக்கு ஆயுள் முழுவதற்குமான குடியுரிமை இரத்து செய்யப்பட  வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பினபற்றாமல் புதிய சட்டத்தினை உருவாக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம்நாட்டில் எதை செய்தது ,என்று மக்கள் தற்போது சில பொய்யான வதந்திகளை நம்பி அரசுக்கு எதிராக செயற்பட முயற்சிக்கின்றனர் .உண்மையான அரசியல் நிலையினை அறிந்து செயற்பட வேண்டும். என தெரிவித்தார்.