பிரதமர் மோடியிடம் உங்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பேன்.!

Published By: Robert

29 Jan, 2018 | 09:47 AM
image

மலையக மக்களுக்காக சேவையாற் றிய தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் திகழ்கின்றார். அவரது பெயரை அழிக்க நினைப்பதும் பெயர்ப் பலகைகளிலிருந்து அவரது பெயரை நீக்குவதும் மிகப்பெரிய குற்றமாகும். அவரது பெயர் எங் கெல்லாம் அழிக்கப்பட்டதோ அவ் விடங்களில் மீண்டும் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் பொறிக்கப்பட்ட வேண்டும் என் பதே எனது கட்டளை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

Image result for ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன virakesari

அடுத்த மாதம் இந்திய பிரதமரை சந்திக்கையில் உங்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார். 

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று  தலவாக்கலையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில். 

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நான் உங்களை சந்தித்தேன். அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்தேன். அவ்வாறன சந்தர்ப்பங்களில் நாம் இங்கு வந்ததை நினைவுபடுத்துவார். நீங்கள் அவரை ஆதரித்ததை கூறுவார். அடுத்த மாதம் மீண்டும் நான் இந்தியாவிற்கு செல்வேன். அப்போதும் அவர் உங்களை நினைவு கூருவார். உங்களின் பிரச்சினைகள், கஷ்டங்கள் என்னவென்பது குறித்து அவர் கேட்பார். ஆகவே நான் மீண்டும் உங்களின் பிரச்சினைகளை அவருக்கு கூறுவேன்.  

எமது மூதாதையர் காலத்தில் இருந்து நீங்கள் கஷ்டப்பட்டு வேலைசெய்த மக்கள், உங்களின் வாழ்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை. உங்களின் பரம்பரை வேதனையுடனேயே வாழ்ந்துவந்துள்ளது.  ஆனால் அன்று நீங்கள் அனுபவிதித்த துன்பங்களில் இருந்து விடுவித்தவர் உங்களின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமனே. அவருடன் நான் நீண்டகாலம் பழகியுள்ளேன். அமைச்சரவையில் நீண்டகாலம் இணைந்து செயற்பட்டுள்ளேன். நீங்கள் மட்டுமல்ல இலங்கையர் அனைவரும் அவரை கெளரவிக்கின்றனர்.  தமிழ், சிங்கள, முஸ்லிம்  மக்கள் அனைவரும் அவரை கௌரவித்து வருகின்றனர். அப்படியான ஒருவரின் பெயரை அழிக்க முயற்சிப்பதும் பெயர் பலகையில் இருந்துகூட அவரது பெயரை அழிக்க முயற்சிப்பதும் மிகப்பெரிய குற்றமாகும். இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுத்த முக்கிய நபர் அவர். அவரது பெயரை அழித்தது மிகப்பெரிய குற்றம். ஆகவே அவரது பெயர் எந்த இடங்களில் இருந்து அழிக்கப்பட்டதோ அவற்றை மீண்டும் நிறுவ வேண்டும் என நான் கட்டளையிட்டுள்ளேன். 

தோட்டத்தொழிலாளர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அதனை தீர்க்கவும் பல காரணிகள் உள்ளன. நோயாளரை குணப்படுத்த முன்னர் நோயை அறிந்துகொள்ள வேண்டும். அப்போதே சரியான சிகிச்சை வழங்க முடியும். அதேபோல்தான் உங்களின் பிரச்சினைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் உங்களின்  ஒருசில பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது. அன்று சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் எமது தலைவர்கள் தீர்வு கொடுத்தனர். இன்றும் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. வீடமைப்பு பிரச்சினை, சுகாதார பிரச்சினை  உள்ளன. குடியிருப்பு அமைக்கும் இடங்களை இன்னும் அதிகமாக்க வேண்டும். அதேப்போல் தேயிலை உற்பத்தி சிக்கல்களும் உள்ளன. பொருளாதார வேலைத்திட்டங்களும் மிகவும் குறைவானதாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேயிலை மட்டும் அல்லது ஏனைய பயிர்ச்செய்கை குறித்தும் ஆராய வேண்டும். இவை பொருளாதரத்தை  பாதிக்கும் செயற்பாடுகளாக அமைந்துள்ளன. தேயிலை பயிர்ச்செய்கை  நாட்டின் பொருளாதாரத்தில்  மிகவும் முக்கியமானது. சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதிகளின் மூலமாக பாரிய பங்களிப்பை செய்கின்றது. ஆனால் இன்று எமது பிரதேசங்களில் தேயிலை உற்பத்தி குறைகின்றது. ஆகவே இவற்றில் மாற்று நடவடிக்கை முன்னெடுக்க தனிக் குழுவொன்று அமைத்து போதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள  நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன். 

தேயிலை வீழ்ச்சி கண்டால் நாட்டின் முழுமையான பொருளாதாரமும் வீழ்ச்சி காணும். ஆகவே அதற்கு இடமளிக்க முடியாது. இவற்றின் பின்னணியின் பாரிய வியாபார கொள்ளையர்கள் உள்ளனர். ஆகவே அரசாங்கம் என்ற ரீதியில் நான் நடவடிக்கை எடுக்கின்றேன். உங்களின் வீடுகளின் நில ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை முக்கியமானது. இந்த யோசனை மிகவும் முக்கியமானது, அதேபோல் தேயிலை உற்பத்தியை முறையாக முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது.  இந்த பிரதேசத்தில் போதைப்பொருள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. அப்படியாயின் இதனை வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்டு கொண்டுவருகின்றனர். நான் போதைப்பொருள் ஒழிப்பு விடயங்களை முன்னெடுத்து வருகிறேன். ஆகவே இங்கு போதைப்பொருள் பாவனையினை கொண்டுவரும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டங்களை நான் முன்னெடுப்பேன். இந்த நகரை புதிய நகராகும் நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். வைத்தியசாலை புதிதாக அமைக்கப்பட்ட போதிலும் குறைபாடுகள் உள்ளன. எனவே அவற்றை நிவர்த்திசெய்ய நான் நடவடிக்கை எடுப்பேன். 

உங்களின் பிரச்சினைகளை தீர்க்க கடினமான தீர்மானங்களை வேலைத்திட்டங்களை நான் முன்னெடுப்பேன். பல்வேறு புதிய வேலைத்திட்டங்களை நான் முன்னெடுப்பேன். ஆகவே இம்முறை தேர்தலில் நீங்கள் அனைவரும் சேவல் சின்னத்திற்கு வாக்களியுங்கள். உங்களின் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என நம்புகிறேன். இம்முறை தேர்தலில் நாடு பூராகவும்  நாம் வெற்றி பெற்று எமது மக்களை நாம் பாதுகாப்போம். நான் சொல்வதை செய்வேன். உங்களின் கல்வி, சுகாதார, வாழ்வாதார பிரச்சினைகள் அனைத்தையும் நான் தீர்த்து வைப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02