பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக பிரமாண்டமாக இடம்பெற்று வந்த ஐ.பி.எல். 2018 க்கான வீரர்கள் ஏலம் நிறைவுக்கு வந்துள்ளது.

இவ் ஏலத்தில் இலங்கையின் இளம் வீரர்கள் இருவர் ஏடுக்கப்பட்டுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவை மும்பை இந்தியன்ஸ் அணி 50 இலட்சத்திற்கு (இந்திய ரூபா ) ஏலத்தில் எடுத்துள்ளது.

அதேபோல், வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சாமிரவை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 50 இலட்சத்திற்கு (இந்திய ரூபா ) ஏலத்தில் எடுத்துள்ளது.

இதேவேளை, ஜோக்கர் மன்னன் லசித் மலிங்கவுக்கு ஏலத்தில் வாய்பே கொடுக்கப்படவில்லை.

மார்டின் குப்தில் இறுதிவரை விலைபோகவில்லை. அதேபோல் கைல் அபோட், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபாரப் பங்களிப்புச் செய்த டேவிட் வீஸ், சகலதுறை ஆட்டக்காரரான பெலுக்வயோ, மோர்னே மோர்கெல், ஆடம் மிலன், லாக்கி பெர்கூசன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள், இந்தியாவின் வருண் ஆரோன், டொம் லெதம், இயன் மோர்கன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஷோன் மார்ஷ், போல்க்னர், ஹேசில்வுட், இஷாந்த் சர்மா, மெக்லினாகன், லசித் மலிங்க, ரஜ்னீஷ் குர்பானி, பாபா அபராஜித் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்த ஏலத்தில் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். 

ஒவ்வொரு அணியும் தலா 25 வீரர்களைக் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் ஐ.பி.எல். அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம். 

இந்நிலையில் கிறிஸ் கெய்ல் இறுதி நேரத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மிட்செல் ஜோன்சனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 கோடிக்கு வாங்கியது.

அணிகளும் வீர்ர்களும்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கனிஷ்க் சேத், ஷேன் வொட்சன், மோனுகுமார், சைதன்ய பிஷ்னாய், ஷிதிஷ் சர்மா, துருவ் ஷோரி, லுங்கி இங்கிடி, டுவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், டுபிளெசிஸ், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஜகதீசன் நாராயண் (வி.கீ/பேட்ஸ்மென்), மார்க் உட், அம்பாத்தி ராயுடு, கரண் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், முரளி விஜய், கே.எம்.ஆசிப்

மொத்தம் செலவிட்ட தொகை ரூ.73.5 கோடி (இந்திய ரூபா )

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

ரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால், முஜீப் ஸத்ரான், மன்சூர் தார், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பிரதீப் சாஹு, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங், கருண் நாயர், கே.எல்.ராகுல், ஆண்ட்று டை, அக்‌ஷதீப் நாத், கிறிஸ் கெய்ல், ஆரோன் பிஞ்ச், மோஹித் சர்மா, பாரிந்தர் ஸ்ரண், அன்கிட் ராஜ்புத், பென் த்வார்ஷுயிஸ், மயங்க் தாகர், அக்சர் படேல். 

செலவிட்ட தொகை ரூ.79.9 கோடி ( இந்திய ரூபா )

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஷுப்மன் கில், கம்லேஷ் நாகர்கோடி, ஷிவம் மாவி, ஜாவன் சியர்லெஸ், இஷாங்க் ஜக்கி, தினேஷ் கார்த்திக், மிட்செல் ஸ்டார்க், கேமரூன் டெல்போர்ட், கிறிஸ் லின், பியூஷ் சாவ்லா, ரொபின் உத்தப்பா, வினய் குமார், அபூர்வ் வான்கடே, குல்தீப் யாதவ், மிட்செல் ஜான்சன், நிதிஷ் ரானா, ரிங்க்கு சிங், சுனில் நரைன், ஆந்த்ரே ரசல். 

செலவிட்ட தொகை ரூ.80 கோடி (இந்திய ரூபா அனைத்தையும் செலவிட்டது)

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி, டிவில்லியர்ஸ், சர்பராஸ் கான், மொகமது சிராஜ், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கொலின் டி கிராண்ட் ஹோம், மனன் வோரா, பவன் நேகி, முருகன் அஸ்வின், அனிகெட் சவுத்ரி, சாஹல், பவன் தேஷ்பாண்டே, அனிருத்தா ஜோஷி, மந்தீப் சிங், குவிண்டன் டி கொக், பிரெண்டன் மெக்கலம், உமேஷ் யாதவ், பார்த்திவ் படேல், நேதன் கூல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டிம் சவுதி, குல்வந்த் கேஜ்ரோலியா. 

செலவிட்ட தொகை ரூ.79.85 கோடி (இந்திய ரூபா)

டெல்லி டேர் டெவில்ஸ்:

ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், சந்தீப் லாமிசான், சயன் கோஷ், அவேஷ் கான், கேகிசோ ரபாடா, குர்கீரத் சிங், டேனியல் கிறிஸ்டியன், மொகமது ஷமி, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் டிவேட்டியா, ஹர்ஷல் படேல், கிளென் மேக்ஸ்வெல், நமன் ஓஜா, ஷாபாஸ் நதீம், அமித் மிஸ்ரா, ஜேசன் ரோய், கவுதம் கம்பீர், டிரெண்ட் போல்ட், கொலின் மன்ரோ, மஞ்சோத் கல்ரா, அபிஷேக் சர்மா, பிரிதிவி ஷா. 

செலவிட்ட தொகை: ரூ.78.4 கோடி ( இந்திய ரூபா )

ராஜஸ்தான் ரோயல்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித், மஹிபால் லொம்ரோர், சகீர் கான், ஜொப்ரா ஆர்ச்சர், துஷ்மந்த சமீரா, பிரசாந்த் சோப்ரா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், கவுதம் கிருஷ்ணப்பா, அன்கிட் ஷர்மா, ஜெயதேவ் உனட்கட், அனுரீத் சிங், ஷ்ரேயஸ் கோபால், ஜதின் சக்சேனா, பென் லாஃப்லின், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டார்சி ஷார்ட், தவல் குல்கர்னி, அஜிங்கிய ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, எஸ்.மிதுன், ஆர்யமான் பிர்லா. 

செலவிட்ட தொகை ரூ78.35 கோடி ( இந்திய ரூபா )

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, நிதீஷ், ஷரத் லும்பா, இஷான் கிஷன், அகிலா தனஞ்ஜயா, பாட் கமின்ஸ், குருணால் பாண்டியா, டுமினி, சூர்யகுமார் யாதவ், எவின் லூயிஸ், சித்தார்த் லாத், சவுரவ் திவாரி, ஆதித்யா தாரே, முஸ்தபிசுர் ரஹ்மான், பிரதீப் சங்வான், ஜேசன் பெஹண்ட்ராப், கெய்ரன் பொலார்ட், பென் கட்டிங், மோசின் கான், மயங்க் மார்கண்டே, தஜீந்தர் சிங், அனுகுல் ராய், ராகுல் சாஹர். 

செலவிட்ட தொகை: ரூ.79.35 கோடி ( இந்திய ரூபா )

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வோர்னர், புவனேஷ்வர் குமார், சையத் கலீல் அகமட், டி.நடராஜன், ரஷீத் கான், தன்மய் அகர்வால், பேசில் தம்பி, ரிக்கி புய், ஷாகிப் அல் ஹசன், பில்லி ஸ்டான்லேக், தீபக் ஹூடா, மெஹதி ஹசன் (இந்திய வீரர்), கார்லோஸ் பிராத்வெய்ட், சந்தீப் சர்மா, சச்சின் பேபி, பிபுல் ஷர்மா, சித்தார்த் கவுல், யூசுப் பதான், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமி, மணீஷ் பாண்டே, கிறிஸ் ஜோர்டான், ஷிகர் தவண், சஹா, கேன் வில்லியம்சன், மொகமது நபி. 

செலவிட்ட தொகை: ரூ.79.35 கோடி ( இந்திய ரூபா )