Image result for இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

இதன்போது, தமிழக மீனவர்களின் இரண்டு படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.