தாய் மகள் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.!

Published By: Robert

28 Jan, 2018 | 11:58 AM
image

ஏறாவூர் நகரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணை கடந்த 26.01.2018 அன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வேளையில் படுகொலைச்  சந்தேக நபர்களில் ஒருவர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால்  ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை பிணையில் விடுதலையான ஏனைய ஐவரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஐவரும் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகின்றனர் என்பதுடன் நீதிபதியின் உத்தரவின் பேரில் இவ்விசாரணை கடந்த டிசெம்பெர் மாதம் முதல் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த 2016 செப்டம்பர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த 2016 செப்டம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒருவருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் ஐவர் பிணையில் வெளியே வந்துள்ளனர்.

ஆறாவது நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதும் அவர் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் தொடர்ந்தும் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44