யாழ்ப்­பாணம் மீசாலை இரா­ணுவ முகாமில் இரா­ணுவ சிப்பாய் ஒரு­வரைக் கொலை செய்­த­துடன், மற்­று­மொரு இரா­ணுவ சிப்­பாயை சுட்­டுக்­கொல்ல முயற்­சித்­த குற்­றச்­சாட்டில் இரா­ணுவ புல­னாய்வு பிரிவைச் சேர்ந்த இரா­ணுவ கோப்ரல் ஒரு­வ­ருக்கு யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் 17 வரு­டகடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்ப­ளித்­துள்ளார்.

அத்­துடன் 20 ஆயிரம் ரூபா தண்­டமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தண்டப் பணம் செலுத்தத் தவ­றினால் மேலும் 2 வரு­டங்கள் கடூ­ழியச் சிறை வாசம் அனு­ப­விக்க வேண்டும் என்றும் நீதி­மன்றம் எச்­ச­ரித்­துள்­ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சித்­திரை புது­வ­ருட தினத்­தன்று மீசாலை இரா­ணுவ முகாமில் கட­மை­யாற்­றிய இரா­ணுவ சிப்பாய் சந்­தி­ர­சிறி என்­ப­வரைத் துப்­பாக்­கியால் சுட்டுக் கொலை செய்­தமை, இரா­ணுவ சிப்பாய் காவிந்த என்­ப­வரைத் துப்­பாக்­கியால் சுட்டு காயப்­ப­டுத்தி கொலை முயற்சி புரிந்­தமை என்ற குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில் இரா­ணுவ புல­னாய்வு கனிஸ்ட அதி­காரி லான்ஸ் கோப்ரல் எதி­ரி­பால என்­ப­வ­ருக்கு எதி­ராக சட்­டமா அதி­பரால் யாழ் மேல் நீதி­மன்றில் கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்த வழக்கில் சாட்­சி­ய­ம­ளித்த காய­ம­டைந்த இரா­ணுவ சிப்­பா­யா­கிய காவிந்த, 14.4.2002 ஆம் திகதி புது­வ­ருட தினத்­தன்று இரவு 11.45க்கும் 12 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் எதி­ரி­யான லான்ஸ் கோப்ரல் எதி­ரி­பால என் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்தார். இதனால் எனக்கு காலில் காய­மேற்­பட்­டது. அதன் பின்னர் எதிரி இரா­ணுவ சிப்பாய் சந்­தி­ர­சிறி மீதும் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்தார். அதனால் காய­ம­டைந்த சந்­தி­ர­சிறி பின்னர் இறந்து போனார். இந்தத் துப்­பாக்கிப்  பிர­யோக சம்­ப­வத்தை என் கண்­களால் கண்டேன் என தெரி­வித்தார்.

சரத் விஜ­ய­சிறி என்ற இன்­னு­மொரு இரா­ணுவ சிப்பாய் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், சம்­பவம் நடை­பெற்­ற­போது நான் நித்­தி­ரையில் இருந்தேன். துப்­பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டு கண்­வி­ழித்துப் பார்த்­த­போது, எதி­ரி­யான லான்ஸ் கோப்ரல் எதி­ரி­வீர என்னை நோக்கி ரீ56 ரக துப்­பாக்­கியை நீட்­டி­ய­வாறு நின்­றி­ருந்தார். அதனைக் கண்டு, நான் எழ முயன்ற போது, என்னை நோக்கி துப்­பாக்­கியால் குறி­வைத்த வண்ணம், நீ நல்­லவன். தப்பி ஓடு என கூறினார். அவ­ரு­டைய கையில் இருந்த துப்­பாக்­கியில் இருந்து அப்­போது, வெடி மருந்து மணம் வீசி­யது என தெரி­வித்தார்.

இந்த வழக்கில் சம்­பந்­தப்­பட்ட மற்­று­மொரு இரா­ணுவ பொலிஸ் அதி­காரி நீதி­மன்­றத்தில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், இந்த சம்­ப­வத்தில் துப்­பாக்கிப் பிர­யோகம் இடம்­பெற்­றதன் பின்னர், எதி­ரியைக் கைது செய்து, அவ­ரி­ட­மி­ருந்த ரீ56 ரக துப்­பாக்­கியைக் கைப்­பற்­றினேன். அதன் பின்னர், எதி­ரி­யையும் அவர் வச­மி­ருந்த துப்­பாக்­கி­யையும் பொலிஸ் நிலை­யத்தில் பாரப்­ப­டுத்­தினேன் என்றார்.

இந்த சம்­ப­வத்தில் இடம்­பெற்ற துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் இரா­ணுவ சிப்பாய் சந்­தி­ர­சி­றியின் மரணம் ஏற்­பட்­டுள்­ள­தாக வைத்­திய கலா­நிதி உருத்­திர பசு­பதி மயூ­ரதன் தனது சாட்­சி­யத்தில் தெரி­வித்தார்.

சம்­பத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் இரா­ணுவ சிப்பாய் சரத் சந்­தி­ர­சி­றிக்கு காயம் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக, இரா­ணுவ வைத்­திய அதி­காரி டாக்டர் மேஜர் முகமட் சரீப் நியாஸ் தனது சாட்­சி­யத்தில் தெரி­வித்தார். இந்தச் சம்­பவம் தொடர்­பாகப் புல­னாய்வு விசா­ர­ணை­களை நடத்­திய பொலிஸ் புல­னாய்வு பொறுப்­ப­தி­காரி அந்த இடத்தில் இரத்தக் கறைகள் இருந்­த­தா­கவும் அங்­கி­ருந்து நான்கு வெற்றுத் தோட்­டக்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­த­துடன் கைப்­பற்­றப்­பட்ட வெற்றுத் தோட்­டாக்­களை அடை­யாளம் காட்டி சாட்­சி­ய­ம­ளித்தார்.

அரச இரா­ணுவ பகுப்­பாய்­வாளர் பத்­தி­ர­ன­லாகே காமினி மட­வல நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­த­போது, அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட இர­சா­யன ஆய்வு குறித்த பகுப்­பாய்வு அறிக்­கையை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பித்து, பகுப்­பாய்­வுக்­காகத் தன்­னிடம் கைய­ளிக்­கப்­பட்ட ரீ 56 ரக துப்­பாக்­கியில் இருந்தே தனக்குக் கைய­ளிக்­கப்­பட்ட நான்கு வெற்றுத் தோட்­டக்­க­ளுக்­கு­ரிய துப்­பாக்கிக் குண்­டுகள் பிர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளன என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாகக் கூறினார்.

எதி­ரி­யான லான்ஸ் கோப்ரல் எதி­ரி­பா­ல­வுக்கு அரச கட­மைக்­காக துப்­பாக்கி வழங்­கிய இரா­ணுவ அதி­காரி நீதி­மன்­றத்தில் ஆஜ­ராகி சாட்­சி­ய­ம­ளித்தார். அவர் தனது சாட்­சி­யத்தில், குறிப்­பிட்ட இலக்கம் கொண்ட ரீ 56 ரக துப்­பாக்­கியை 2000 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி கைய­ளித்­த­தா­கவும், அதனை அவர் பெற்­றுக்­கொண்­டதை உறு­திப்­ப­டுத்தி ஆயுதக் கிடங்கின் ஆவணப் பட்­டி­யலில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­தா­கவும் கூறி, அதற்­கான ஆதா­ர­மாக அந்தப் பட்­டி­யலை நீதி­மன்­றத்தில் சான்­றாக சமர்ப்­பித்தார்.

இந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது குற்றம் சுமத்­தப்­பட்ட எதிரி லான்ஸ் கோப்ரல் எதி­ரி­வீ­ரவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.

'சம்­பவ தினத்­தன்று நான் மது­போ­தையில் இருந்தேன். நான் யார் மீதும் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­ய­வில்லை. அன்­றி­ரவு 2 மணிக்குப் பின்னர் நான் பொலிஸ் நிலைய கைதிக்­கூண்டில் இருப்­பது எனக்குத் தெரிந்­தது. கட­மைக்­காக எனக்கு எது­வித ஆயு­தமும் யாரும் தர­வில்லை' என நம்­ப­கத்­தன்­மை­யற்ற வகையில் கூறினார்.

இந்த வழக்கு தொடர்­பான சம்­ப­வத்தில், துப்­பாக்கிப் பிர­யோக சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு 5, 10 நிமி­டங்­க­ளுக்கு முன்னர், எதி­ரிக்கும் இறந்­த­வ­ருக்கும் இடையில் திடீர்ச் சண்­டை­யொன்ற எற்­பட்­டி­ருந்­தது என்­பது வழக்கு விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. ஆயினும் இந்தச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வரைக் கொலை செய்­வ­தற்­கான எண்ணம் எதுவும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. இதனால் முத­லாது குற்­றச்­சாட்டை நீதி­பதி கைமோசக் கொலைக் குற்­றச்­சாட்­டாக மாற்றம் செய்தார். விசா­ர­ணையின் முடிவில், கைமோசக் கொலைக் குற்­றச்­சாட்டு,  கொலை முயற்சிக் குற்­றச்­சாட்டு ஆகிய இரண்டு குற்­றங்­க­ளிலும் எதி­ரியை குற்­ற­வாளி என நீதி­மன்றம் கண்­டது.

அப்­போது, எதி­ரியை நோக்கி ஏதா­வது கூற விரும்­பு­கி­றீர்­களா என்று கேட்­ட­போது, கூறு­வ­தற்கு எது­வு­மில்லை என எதிரி பதி­ல­ளித்தார். இத­னை­ய­டுத்து நீதி­பதி இளஞ்­செ­ழியன் தனது தண்­டனைத் தீர்ப்பில் தெரி­வித்­த­தா­வது:

இந்த வழக்கில் எதி­ரி­யாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள இரா­ணுவ லான்ஸ் கோப்ரல் எதி­ரி­வீர தானா­கவே விரும்பி மது அருந்­தி­யமை அவ­ரு­டைய தவறு. இந்த இரா­ணுவ வீரர், கடமை புரியும் இரா­ணுவ முகாமில் மது போதையில் ஆபத்­தான ஆயு­த­மா­கிய துப்­பாக்­கியை ஏந்தி துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தி­ருப்­பது மன்­னிக்க முடி­யாத குற்­ற­மாகும்.

இதனை பார­தூ­ர­மான ஒரு செய­லாக நீதி­மன்றம் கரு­து­கின்ற போதிலும், குற்­ற­வா­ளி­யா­கிய எதி­ரிக்கு முத­லா­வது குற்­றச்­சாட்­டுக்கு 12 ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத்­தண்­ட­னையும் 10 ஆயிரம் ரூபா தண்­டப்­ப­ணமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­ப­டு­கின்­றது. இந்தத் தண்டப் பணத்தைச் செலுத்தத் தவ­றினால், ஒரு வருடம் கடூ­ழியச் சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்டும். அதே­போன்று, சரத் விஜ­ய­சிறி என்ற இரா­ணுவ வீரர் மீதான கொலை முயற்சி குற்­றச்­சாட்­டுக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகின்றது. தண்டப் பணத்தைக் கட்டத் தவறினால் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில் எதிரியின் செயற்பாட்டினால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பதனால், எதிரி 2 தண்டனைகளுக்கும் மொத்தமாக 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அத்துடன் மொத்தமாக 20 ஆயிரம் ரூபா தண்டமாகச் செலுத்த வேண்டும். தண்டப் பணம் செலுத்தத் தவறினால் இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைவாசம் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரும், நீதிமன்றத் தண்டனை பெற்றவரும் வவுனியா உலுக்குளம் என்ற ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.