அமெ­ரிக்­கா­வி­லுள்ள  'குஹ்­ஹெனீம்' என்ற அருங்­காட்­சி­ய­கத்தில் பிர­பல ஓவியர் வான்கா வரைந்த ஓவியம் ஒன்று இருக்­கி­றது. இந்த ஓவி­யத்தை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தன்­னு­டைய தனி வீட்டில் வைக்க அனு­ம­தி­கேட்­டி­ருக்­கிறார். இதற்­காக அவர் அருங்­காட்­சி­ய­கத்­திற்கு கடி­த­மொன்­றையும் எழுதி இருக்­கிறார். 

ஆனால், அந்த அருங்­காட்­சி­யகம் அந்த ஓவி­யத்தை அவ­ருக்கு விற்க மறுத்து இருக்­கி­றது. அதற்கு பதி­லாக தங்­கத்தால் ஆன கழி­வறை ஒன்றை வேண்­டு­மானால் எடுத்துக் கொள்­ளுங்கள் என்று பதில் அனுப்பி இருக்­கி­றது. அருங்­காட்­சி­ய­கத்தின் இந்­தப்­பதில் பெரிய சர்ச்­சையை கிளப்பி உள்­ளது. 

ஏனென்­றால்­ஜ­னா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கேட்­டது வான்கா வரைந்த ஓவியம் ஆகும். ''லேண்ட்ஸ்கேப் அண்ட் ஸ்னோ'' என்று பெய­ரி­டப்­பட்டு இருக்கும் இந்த ஓவியம் 1888ல் வரை­யப்­பட்­டது. இதன் தற்­போ­தைய மதிப்பு பல கோடி­களை தாண்டும். பச்சை புல்­வெ­ளியில் மனி­தரும், நாயும் நடந்து செல்­வது போல இது இருக்கும். இந்த ஓவி­யத்தை கொடுக்க மறுப்புத் தெரி­வித்தே அந்த அருங்­காட்­சி­யக  நிர்­வாகம் பதில் அனுப்பி இருக்­கி­றது. 

அதில் ''இப்­போது அந்த ஓவி­யத்தை விற்கும் எண்­ணத்தில் இல்லை. அதற்கு பதி­லாக உங்­க­ளுக்கு 'அமெ­ரிக்கா' என்ற கழி­வறை  ஒன்றை தரு­கிறோம். இது தங்­கத்தால் ஆனது'' என்று குறிப்­பிட்டு இருக்­கி­றார்கள். இதை சில காத்திற்கு முன்பு வரை அந்த அருங்­காட்­சி­யகம் பொதுத்­தே­வைக்­காக வைத்­தி­ருந்­தது. மக்கள் இதை பயன்­ப­டுத்திக் கொண்டு இருந்­தார்கள். அதற்கு அமெ­ரிக்கா என்று பெயர் வைக்­கப்­பட்டு இருக்­கி­றது. அமெ­ரிக்­கர்­களின் வளத்தைக் குறிக்க இந்தப் பெயர் வைக்­கப்­பட்­டுள்­ளது. 18 கரட் தங்­கத்­தா­லா­னது குறித்த கழி­வறை. மேலும் அருங்­காட்­சி­யகம், ''இதை உங்கள் வீட்டில் வந்து நாங்­களே பொருத்தி தரு­கிறோம். எப்­படி இதை பயன்­ப­டுத்த வேண்டும் என்றும் சொல்­லிக்­கொ­டுக்­கிறோம். முக்­கி­ய­மாக இதை நீங்கள் வாங்க முடி­யாது. சில மாத வாட­கைக்கு மட்­டுமே எடுக்­கலாம்'' என்று அறி­வித்­துள்­ளார்கள்' 

இது அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கு நேர்ந்த பெரிய அவமானம் ஆகும். வேண்டும் என்றே ஜனாதிபதியை அந்த அருங்காட்சியக நிர்வாகம் அவமானப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.