இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இலங்கைக்கான நண்பர்கள் குழுவின் தலைவர் ஜியோபிரி வென் ஓடன் தலைமையிலான  பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு  செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.    

இச்சந்திப்பின் போது 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன்  .  இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்டு  வந்த காணிகளை மக்களுக்கு விடுவிக்கப்பட்டது தொடர்பாகவும் பாதுகாப்புச் செயலாளார்  ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு விளக்கமளித்தார்.