ஈராக்கின் அல் அன்பர் மாகாணத்தில் அமெரிக்க ராணுவக் ஹெலிகொப்டர் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதலில், 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல் அன்பர் மாகாணத்தின் மேற்கு ரமாடி நகரில் இன்று  இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மேற்படி நகரில் பொதுமக்களின் வாகனங்களை இலக்குவைத்து அமெரிக்க ராணுவக் ஹெலிகொப்டர் மூலமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பொலிஸ் மா அதிபரும் அடங்குவதாகவும், அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது

இந்தத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ராணுவத்தினர் எந்தவிதத் தகவலையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.