பிரான்ஸின் தலைநகர் பரிஸிலுள்ள செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆறு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக அந் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பரிஸில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து, செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வழமையாக 4 மீற்றர் உயரத்தில் காணப்படும் ஆற்றின் நீர்மட்டம், தற்போது 6 மீற்றராக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், செய்ன் ஆறு பெருக்கெடுக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. ஆறு பெருக்கெடுக்கும் பட்சத்தில் ஆற்றை அண்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், மழை காரணமாக பரிஸில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பரிஸில் படகுச் சேவைகள் மற்றும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், Louvre அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது.