(ப.பன்னீர்செல்வம்) 

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் வரை பிற்போடப்படலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொழும்பு பெஜட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கும்  இடையே நேற்று  இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் பாதகமாக அமையும் என இப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர். இவர்கள் தொடர்பில் கட்சி மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.