எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கை குடியரசின் 70ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. 

இந்நிலையில் சுதந்திர தின முன்னேற்பாடுகள் மற்றும் சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான பயிற்சிகளுக்காக நாளை  மற்றும் எதிர்வரும் 31ம் திகதியும் காலி வீதியின் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து பழைய பாராளுமன்றம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. 

அதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியில் இருந்து 3ஆம் திகதி வரையான நாட்களிலும் குறித்த வீதி  மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற் குறித்த  நாட்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியேலயே குறித்த வீதி  மூடப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.