2018 ஆம் ஆண்­டுக்­கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொட­ருக்­கான வீரர்கள் ஏலம் பெங்­க­ளூருவில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடை­பெ­ற­வுள்­ளது.

எதி­ர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆ-வது ஐ.பி.எல். தொடர் தொடங்க இருக்­கி­றது. இத்­தொ­டரில் பங்­கேற்கும் அணி­களில் விளை­யாட இருக்கும் வீரர்­க­ளுக்­கான ஏலம் இன்றும், நாளையும் பெங்­க­ளூருவில் நடக்­கி­றது. ஏற்­க­னவே18 வீரர்கள் 8 அணிகள் மூலம் தக்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தக்­க­ வைக்­கப்­பட்­டுள்­ளனர். 

வீரர்கள் ஏலத்தில் 360 இந்­தி­யர்கள் உள்­பட 578 வீரர்கள் இறுதிப் பட்­டி­யலில் இடம்பெற்­றுள்­ளனர். 

இந்­தி­யர்­களில் 62 பேர் சர்­வ­தேச போட்­டிகளில் விளை­யா­டிய வீரர்கள் ஆவர்.இரண்டு நாட்கள் நடை­பெறும் ஏலத்தில் ஒவ்­வொரு அணியும் குறைந்­த­பட்சம் 60 கோடி ரூபாவுக்கு வீரர்­களை ஏலத்தில் எடுக்க வேண்­டி­யி­ருக்கும். அதே நேரத்தில் அதி­க­பட்­ச­மாக 80 கோடி ரூபா செல­வ­ளித்து 25 பேர் கொண்ட அணியை ஏலத் தில் எடுக்­க லாம்.  இந்த  தொகை   கடந்த ஆண்டு 66 கோடி ரூபா­வி­லி­ருந்து 80 கோடி ரூபா­வாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.ஏலப்­பட்­டி­யலில் அதி­க­பட்ச அடிப்­படை விலை­யாக   2 கோடிரூபா  நிர்­  ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.