இலங்கை சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கம் ஏற்­பாடு செய்த வெட்­டரன்ஸ் அணி­க­ளுக்கிடை­யி­லான எட்­டா­வது திலக் பீரிஸ் சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி வெள்­ள­வத்தை குரே பார்க் மைதா­னத்தில் இன்று சனிக்­கி­ழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இந்த இறுதிப் போட்­டியில் கொட்­டாஞ்­சேனை ஓல்ட் பென்ஸ் கழ­கமும் கேகாலை சொக்கர் வெட்­ட ரன்ஸ் கழ­கமும் மோத­வுள்­ளன.

முன்னாள் தேசிய வீரர்கள் பலர் இரண்டு அணி­க­ளிலும் இடம்­பெ­று­வதால் இப் போட்டி விறு­வி­றுப்பை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கால் இறுதிப் போட்­டியில் கலம்போ வெட்­டரன்ஸ் அணியை 2 – 0 என்ற பெனல்டி முறை­யிலும் அரை இறு­தியில் மாளி­கா­வத்தை வெட்­டரன்ஸ் அணியை 2 – 0 என்ற பெனல்டி முறை­யிலும் ஓல்ட் பென்ஸ் வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

கேகாலை வெட்­டரன்ஸ் கழகம் காலி­று­தியில் பதுளை மாவட்ட வெட்­டரன்ஸ் கழ­கத்தை 1 – 0 எனவும் அரை­யி­று­தியில் பதுளை மாவட்ட வெட்டரன்ஸ் அணியை 2 – 1 எனவும் வெற்றிகொண்டது.