2018 ஆம் ஆண்டின் முதல் தொடரை வெற்­றி­கொள்­வது யார் என்ற போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்கை  – பங்­க­ளாதேஷ் – சிம்­பாப்வே ஆகிய அணிகள் மோதும் முத்­த­ரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்­டியில் ஒவ்­வொரு லீக் போட்­டி­யிலும் எதி­ர­ணி­களை வீழ்த்தி சம­ப­லத்­துடன் திகழும் இலங்­கையும் பங்­க­ளா­தேஷும் மோது­கின்­றன.

இந்தத் தொடரின் ஆரம்­பத்தில் ஆதிக்கம் செலுத்­திய அணி பங்­க­ளாதேஷ் தான். அதன்­பி­றகு இரண்­டா­வது இடத்தில் சிம்­பாப்வே திகழ்ந்­தது.

காரணம் இலங்கை அணி தான் விளை­யா­டிய முத­லி­ரண்டு போட்­டி­க­ளிலும் பங்­க­ளாதேஷ் மற்றும் சிம்­பாப்வே அணி­க­ளிடம் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

அதன்­பி­றகு நடை­பெற்ற இரண்டு போட்­டி­க­ளிலும் இவ்­விரு அணி­க­ளுக்கும் பதி­லடி கொடுத்து இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யது இலங்கை.

அதுவும் பங்­க­ளாதேஷ் அணிக்­கெ­தி­ரான கடைசிப் போட்­டியில் 10 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­யீட்டி சாதனை படைத்­தது இலங்கை.

இந்­நி­லையில் இந்தத் தொடரின் இறு திப் போட்டி இன்று பங்­க­ளா­தேஷில் முற்பகல் 11.30 மணி­க்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்தப் போட்­டியில் இலங்கை அணி வீரர்கள் இருவர் சாதனை படைக்கக் காத்­தி­ருக்­கின்­றனர்.

அதில் அண்­மைக்­கா­ல­மாக சிறந்த சக­ல­துறை ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­வரும் திஸர பெரே­ரா­வுக்கு 150 விக்­கெட்­டுக்­களை பெற இன்னும் ஒரே ஒரு விக்­கெட்தான் தேவை.

அதேபோல் இலங்கை அணியின் மற்­றொரு நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான சுரங்க லக்­மாலும் ஒரு மைல்­கல்லை இன்­றைய போட்­டியின் மூலம் எட்­ட­வுள்ளார்.

அவர் தனது ஒருநாள் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டியில் 100 விக்­கெட்­டுக்­களை வீழ்த்த இன்னும் அவ­ருக்கு இரண்டு விக்­கெட்­டுக்­கள்தான் தேவை­யாக உள்ளன.

இன்­றைய போட்­டியின் மூலம் இந்த இரு­வரும் தங்­க­ளது விக்­கெட் சாத­னையை நிகழ்த்­து­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் புதிய பயிற்­சி­யாளர் ஹத்­து­ரு­சிங்­கவின் பயிற்­சியின் கீழ் இலங்கை அணி சற்று முன்­னே­றி­யி­ருக்­கி­றது என்றே சொல்லலாம்.

முத­லி­ரண்டு போட்­டி­க­ளிலும் திண­றி­னாலும் மற்­றைய இரண்டு போட்டிகளிலும் நம்பிக்கையுடன் ஆடி வெற்றிகளைக் குவித்தது இலங்கை. 

மறுமுனையில் பங்களாதேஷ்அணியும் சமபலத்துடனேயே திகழ்கிறது. அதுவும் அவர்களின் சொந்த மைதானம் என்ப தால் இன்னும் சிறப்பாகவே தயாராகியிருப்பார்கள். 

அதனால் இன்­றைய போட்­டியை இரண்டு அணி­களும் தங்­க­ளது ஆண்டின் முதல் வெற்­றி யை தக்­க­வைத்­துக்­கொள்ள கடு­மை­யாக போராடும் என்­பது நிச்­சயம்.

இன்­றைய இறுதிப் போட்­டியில் வெற்­றி­பெற்று கிண்­ணத்தை கைப்­பற்­றப்­போ­வது யார் என்­பதை பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.