பலஸ்­தீ­னர்கள் சமா­தான பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்க  இணங்­கா­விட்டால் அவர்­க­ளுக்­கான  உத­விகளை நிறுத்தப் போவ­தாக  அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார்.

சுவிட்­ஸர்­லாந்தின்  டாவோஸ் நகரில்  இடம்­பெற்று வரும் உலக பொரு­ளா­தார மன்றக் கூட்­டத்தில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

 டொனால்ட் ட்ரம்ப்   இதன்­போது பலஸ்­தீ­னத்­துக்­கான  பொரு­ளா­தார மற்றும் பாது­காப்பு அனு­ச­ரணை உத­வி­க­ளையே நிறுத்தப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ள­தாக  அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் தெரி­விக்­கி­றது.

 பலஸ்­தீனம் அமெ­ரிக்­கா­வுக்கு  கௌர­வ­ம­ளிக்­கா­துள்­ள­தாகக் குற்­றஞ்­சாட்­டிய டொனால்ட் ட்ரம்ப்,   எமக்கு எத­னை யும் அவர்கள் செய்­யாத நிலையில் நாம் ஏன் அவர்­க­ளுக்கு எதை­யா­வது செய்ய வேண்டும்? "  எனக்  கேள்வி எழுப்­பினார்.

அமெ­ரிக்கா பலஸ்­தீ­னர்­க­ளுக்கு  வரு­ட­மொன்­றுக்கு பல நூற்­றுக்­க­ணக்­கான மில்­லியன்  டொலர் பெறு­ம­தி­யான  உத­வி­களை வழங்கி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.

" பலஸ்­தீன தலை­மைத்­துவம்   இந்த வார ஆரம்­பத்தில் எமது  மாபெரும் உப ஜனா­தி­பதி மைக் பென்ஸை சந்­திக்க மறுத்­ததன் மூலம்  எம்மை அவ­ம­தித்­துள்­ ளது"  என  அவர் தெரி­வித்தார்.

சமா­தான செயற்­கி­ர­மத்­துக்­காக  நிதி­யு­த­வி­ய­ளித்த முத­லா­வது ஜனா­தி­பதி தான் எனக் குறிப்­பிட்ட  டொனால்ட் ட்ரம்ப், " அந்தப் பணம் மேசையின் மீதே உள்­ளது.  அவர்கள் அமர்ந்து சமா­தானம் குறித்து  பேச்­சு­வார்த்தை  நடத்­தாத வரை அந்தப் பணம் அவர்­க­ளிடம் செல்­ல­மாட்­டாது"   என  வலி­யு­றுத்­தினார்.

 இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்­டன் ­யா­­வுக்கு அருகில் அமர்ந்­த­வாறு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­படி விமர்­ச­னத்தை வெளி­யிட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 பலஸ்­தீ­ன­மா­­னது அமெ­ரிக்­காவின் மத்­தி­யஸ்­தத்­து­ட­னான  சமா­தான பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்க மறுப்புத் தெரி­வித்­துள்­ளது.

 கடந்த வரு­டம் டிசம்பர் மாதம்  இஸ்­ரேலின் தலை­ந­க­ராக  ஜெரு­ச­லேமை அங்­கீ­க­ரிக்க அமெ­ரிக்கா எடுத்து சர்ச்­சைக்­கு­ரிய  தீர்­மா­னத்தால்  பலஸ்­தீ­னர்கள் கடும் சின­ம­டைந்­துள்­ளனர்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் பிந்­திய விமர்­சனம் குறித்து  முன்னாள் பலஸ்­தீன பேச்­சா­ள­ரான சாயெப்  எரேகத் தெரி­விக்­கையில்,  "ட்ரம்பால் தனது பணத்தைப் பயன்படுத்தி பல பொருட்களை வாங்க  முடிந்திருக்கலாம்.  ஆனால்  அவரால் எங்களது நாட்டின்   கௌரவத்தை வாங்க முடியாது"  என்று கூறினார்.