இத்­தா­லியில் தொழில் பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து பணம் மோசடி செய்த நபர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் விசேட விசா­ர­ணைப்­பி­ரிவு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இத்­தா­லியில் தொழில் பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து பணம் மோசடி செய்த நபர் ஒருவர் பணி­ய­கத்தின் விசேட விசா­ர­ணைப்­பி­ரிவு அதி­கா­ரி­களால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளார். இத்­தா­லியில் தொழில் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சந்­தேக நப­ருக்கு பணம் வழங்­கிய நபர் ஒருவர் தொழில் கிடைக்­கப்­பெ­றாத கார­ண­மாக பணி­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

அதன் பிர­காரம் செயற்­பட்ட பணி­யக அதி­கா­ரிகள் மேற்­கொண்ட இர­க­சிய விசா­ரணை ஒன்றின் பின்னர் கல்­கிஸ்ஸ பிர­தே­சத்தில் வைத்து சந்­தேக நபரை கைது செய்­துள்­ளனர்.  ரத்­ம­லானை பிர­தே­சத்­தைச்­சேர்ந்த சந்­தேக நபர், தனது காரிலே நட­மாடும் தொழில் நிறு­வனம் ஒன்றை நடத்­திச்­சென்­றுள்ளார். அத்­துடன் குறித்த காரில் இருந்து வெளி­நாட்டு கட­வுச்­சீட்­டுக்கள் 23 மற்றும் இத்­தா­லிக்­கான தொழில் ஒப்­பந்த பத்­தி­ரங்கள் 9 கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய வேறு சந்­தேக நபர்கள் இருக்­கின்­ற­னரா  என பணி­யக விசா­ர­ணைப்­பி­ரி­வி­னரால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அத்­துடன் சட்­ட­பூர்­வ­மான அனு­ம­திப்­பத்­திரம் இல்­லாமல் நபர்­களை வெளி­நாட்டு தொழி­லுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுத்­தமை மற்றும் பணம் மோசடி செய்த குற்­றச்­சாட்டில் சந்­தேக நபர் நேற்­றைய தினம் கல்­கிஸை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

இதே­வேளை, குறித்த சம்­பவம் தொடர்பில் நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­விக்­கையில், இவ்­வா­றான மோசடி காரர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை நிலை நாட்ட ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இதுபோன்ற மோசடிகாரர்கள் தொடர்பில் தகல் தெரிந்தவர்கள் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு அறிவிக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.