இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இரு நாட்டு உறவுகள் மேலும் வலுவான முறையில் விரித்தியடைந்துள்ளதென அந்திய உயர்ஸ்தாணிகர் தரன்ஜித் சிங் சந்து  தெரிவித்தார். 

இரு நாட்டு தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் விரித்தியடைந்துள்ள அந்நியோன்ய உறவை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் கடந்த காலங்களில் பல துறைகளிலும் இலங்கையில் பரந்தளவில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள முடிந்தது.

இந்தியாவின் 69 ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. 

இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் , இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடைய குடியரசு தின செய்தியை வாசித்தார்.

அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

இந்தியா ஜனவரி 26, 1950 இல் குடியரசு ஆனது. இது நாட்டை கட்டியெழுப்புவதில் இரண்டாவது பாரிய மைல்கல் ஆகும். இதற்கு இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாம் சுதந்திரம் பெற்றோம். இது இந்திய அரசியலமைப்பிற்கும் குடியரசிற்கும் வழிசமைத்தது.

மத, இன மற்றும் சமூக வேறுபாடுகள் இன்றி பிரஜைகளிடையே சம உரிமையை நாம் சிறப்பாக எய்தியுள்ளோம். மில்லியன் கணக்கான மக்கள் இந்திய சுதந்திரத்திற்காக அரும் பெரும்பாடுபட்டு தமது ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் தமக்குரிய அனைத்தையும் நல்கினார்கள். பலர் தமது இன்னுயிரையும் கொடுத்தார்கள் . மகாத்மாகாந்தியின் தலைமைத்துவத்தின் கீழ் ஆண்களும், பெண்களும் போராடி எமக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்கள்.

சுதந்திர போராட்ட வீரர்கள்  எமக்கு அரசியல் சுதந்திரத்தையும்  கொடுத்தார்கள். அத்துடன் அவர்கள் நின்றுவிடவில்லை.  அவர்கள் அவர்களது முயற்சியை இருமடங்காக்கினார்கள். அரசியலமைப்பை உருவாக்கும் பொறிமுறையில் அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அரசியலமைப்பை புதிய நாட்டிற்கான அடிப்படைச் சட்டமாக அரசியலமைப்பை அவர்கள் நோக்கி சமூக மாற்றத்திற்கான சாசனமாக கண்டார்கள். எமது அரசியலமைப்பிற்கு பல ஆண்களும், பெண்களும்  தொலைநோக்குடன் பங்களிப்பு செய்துள்ளனர். 

சட்டத்தின் மகிமையையும் சட்ட ஆட்சியின் பொருளையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எமது தேசிய வாழ்வை  அவர்கள் பிரதிநிதித்துவம் செய்திருந்தார்கள். அரசியலமைப்பு மற்றும் குடியரசு தொடர்பில் நாங்கள் அதிர்ஷ்டமானவர்களாக உள்ளோம். நாம் சிறப்பாக உள்ளதற்கு இந்த நாள் முக்கியமானது. தேசத்தை கட்டியெழுப்புவதானது சிறந்த திட்டமாகும். தேசத்தை கட்டியெழுப்புவதானது குடும்பத்தை உருவாக்குதல், அண்டை அயலாரை உருவாக்குதல், குழுக்களை உருவாக்குதல், தொழிலை உருவாக்குதல், அமைப்பை உருவாக்குதல் மற்றும் சமூகத்தை உருவாக்குதல் ஆகும்.

சம உரிமை குடும்பங்களாலும் சமூகத்தாலும் சம உரிமை நாடு கட்டியெழுப்பப்படுகிறது. குடும்பத்தில் ஆண்களிற்கு நிகராக பெண்களும் சம உரிமையுடன் கல்வி மற்றும் சுகாதாரத்தை பெற்று வாழ்கின்றனர்.

பெண்களிற்கு உரிமையை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் கொள்கை வகுப்பை மேற்கொள்ளலாம். ஆனால் எமது புதல்விகளின் குரலுக்கு செவிமடுக்கும் குடும்பமாக சமூகமாக நாம் இருக்க வேண்டும். மாற்றத்திற்கான தூண்டுதலை நாம் செவிமடுக்காமல் இருக்க முடியாது.

நம்பிக்கையும் முற்போக்கான இளைய சமுதாயம் நம்பிக்கையும் முற்போக்கான நாட்டை கட்டியெழுப்பும் எமது குடிமக்களில் 60 சத வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 35 வயதிற்குட்பட்டவர்கள். எமது நம்பிக்கை அவர்களிலேயே தங்கியுள்ளது. நாம் ஆன்று அகன்ற இலக்கியத்தை கொண்டுள்ளோம். நாம் எமது கல்வியினதும் அறிவினதும் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும். எமது தேவைப்பாடாக எமது கல்வி முறையை சீரமைத்து தரமுயர்த்தி விரிவுபடுத்துவதாக அமைய வேண்டும்.

21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஜினோ மிக்ஸ் ரோபோ தொழில் நுட்பம் என எமது கல்வி முறை அமைய வேண்டும். சர்வதேச மயப்படுத்தப்பட்ட உலகத்தில் எமது இளைஞர்கள் போட்டி போடக்கூடிய வகையில் எமது திட்டங்களும் முனைப்புகள் அமைய வேண்டும். இதற்கான பெரும் மூலாதாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.