இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தில் கடந்த பல சதாப்த காலமாக நிறைவேற்ற முடியாத விடயங்களை நல்லாட்சி அரசின் கொள்னையின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள  பொது மக்கள் அர்ப்பணிப்புடன் செயறபட வேண்டும்  என உள்நாட்டலுவல் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. 

கடந்த 70 வருடகாலமாக இலங்கை பல துறைகளில் பாரிய முன்னேற்றத்தினை கண்டுள்ளது. சுதந்திர விழாவிற்கு 100 மேற்மட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துக் கொள்வதுடன் விவேட அதிதியாக பிரித்தானிய இளவரசர் எட்வட் கலந்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிட தக்கதொரு விடயமாகும்.

கடந்த 69 வருட காலமாக இலங்கையின் முன்னேற்றம் குறித்த வரையறைக்குள் மாத்திரமே காணப்படுகின்றது. நாட்டின் முன்னேற்றத்தில் உரிமை கோரும் மக்கள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியிலும் உரிமை கொள்ளுதல் அவசியமான விடயமாக காணப்படுகின்றது.

சுதந்திர தினத்தன்று பொது மக்கள் தமது இருப்பிடங்களில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்த வேண்டியது நாட்டின் மீதான பற்றின் வெளிப்பாடாக அமையும் என அவர் மேலும்ம தெரிவித்தார்.