விறகு வெட்டச் சென்ற முதியவரொருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் டயகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம மேற்கு தோட்டத்தின் 3 ஆம் இலக்கப் பிரிவில் வசிக்கும் 60 வயதுடைய நபரே குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் விறகு வெட்டுவதற்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்ற போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சடலம் தற்போது டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக டயகம  வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.