டெல்லி உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முழுவதும் காஷ்மீரில் மொபைல் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குடியரசு நாள் கொண்டாடப்படும் தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதால் தீவிரவாதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பை துண்டிக்கும் வகையில் இன்று காஷ்மீரில் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது