கச்சதீவை மீட்டுத் தரக்கோரி சிவசேனா கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவசேனா கட்சியின் மாநில துணைதலைவர் புலவன் போஸ் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற சிவசேனா கட்சியினர், மீனவர் நலனுக்காகவும் பாரம்பரிய தீவுகளில் ஒன்றான  கச்சத்தீவை மீட்டுதரக்கோரி இராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் இறங்கி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்பினர்கள் வருடம் தோறும் கச்சத்தீவை மீட்டுத்தரக்கோரி கடலில் இறங்கி தங்களது எதிர்பை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.