மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி காணாமல்போன இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் பொறியியலாளரான கணேஷமூர்த்தி உமாரமணனுடையதென உறவினர்கள் அடையாம் காட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு, கல்லடி இலங்கை மின்சாரசபை  அலுவலகத்தில்  கடமையாற்றும் பொறியியலாளர் ஒருவரைக் காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறு வீட்டில் கடிதம் எழுதிவைத்துவிட்டு குறித்த பொறியியலாளர்  வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக நபரொருவர் குதித்ததாக செய்திகள் வெளிவந்த நிலையிலேயே குறித்த நபரின் சடலம் இன்று காலை கல்லடி வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு கல்லடி பாலத்திலிருந்து ஒருவர் குதித்ததாக வெளியான செய்தியால் பரபரப்பு!