தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததற்காக அரசிடம் தலா இரண்டு கோடி ருபா பெற்றதாக சக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியிருத்தார்.

அவ்வாறு அரசிடம் இரண்டு கோடி ரூபா தான் பெற்றதாக முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுமாறு சிவசக்தி ஆனந்தனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

 

அவரது இல்லத்தில் இன்று காலை ஊடகங்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மேலும் தான் ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியின் ஊடக அரசியலுக்கு வந்த்தாக சிவசக்தி ஆனந்தன் கூறியிருப்பதை மறுதலித்துள்ளதுடன்  அக் கட்சியினர்  தற்போது தனக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சி கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்ததாகவும் அதனாலேயே தற்போது வரை அதன் தலைவரும் செயலாளரும் கனடா நாட்டிற்கு செல்ல முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஈ.பீ.ஆர்.எல்.எப். இதுவரை காலமும் எம்மோடு இணைந்து பணியாற்றிதால் அவர்களைப் பற்றி பேசாதிருந்த்தாகவும் தற்போது அவர்களின் கடந்தகால செயற்பாடுகள் குறித்து பேச வேண்டி ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

ஆகவே அவர்களின் கடந்த கால வரலாறுகளை மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது. இதனால் இனி அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும். இருந்தும் அவர்கள் எமக்கெதிரான செயற்பாடுகளை தொடர்ந்தால் நாங்களும் பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளோம்.

எனவே கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறியா வேண்டாமென்று அவர்களை கேட்டு கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.