இந்தியாவின் 69 ஆவது குடியரசுதினம் இன்று இலங்யைிலுள்ள இந்திய இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தலைமையில் இடம்பெற்றது.

இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடைய குடியரசு தின உரையை வாசித்தார்.

இந்தியாவின் 69 ஆவது குடியரசுதினம் இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.