ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பிலேயே குறித்த இருவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமுாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.