அமெரிக்கவையே அதிர வைக்கும் அளவுக்கு ஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியர் நடத்திய காம வேட்டை அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியளித்தது அந்நாட்டை உலுக்கியுள்ளது.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் வைத்தியராக  இருந்த லாரி நாசர், சிகிச்சை என்ற பெயரில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் வைத்தியர் லாரிக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியம் அளித்தது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பெண்கள் சாட்சியளித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த சாட்சி அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது. 

மரோனே என்பவரது சாட்சியம் பலரையும் கலங்கடித்துள்ளது. இவர் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க அணியில் முக்கிய வீராங்கனை.

இது குறித்து மரோனே கூறியதாவது,

" என் வாழ்க்கையில் இருண்ட நாள் அது, எனக்கு அப்போது 15 வயது, ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்குபெற டோக்கியோவுக்கு விமானத்தில் சென்றேன்.

எங்களுடன் வைத்தியர் லாரியும் வந்திருந்தார். மறுநாள் காலை நான் கண்விழித்தபோது ஒரு தனி அறையில் லாரி அருகில் இருந்தேன்.

பின்னர் தான் தெரிந்தது வைத்தியர் லாரி எனக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது.

நான் கண்விழித்தபோது இறந்துவிடுவேன் என்று நினைத்துப் பயந்தேன். லாரி சிறுமிகளைச் சீரழித்த சாத்தான். அந்த சாத்தான் எனக்கு அளித்த ரணத்தை நான் மறக்கவே மாட்டேன்" என்றார்