பொதுவாக மொடலிங் தொழிலுக்கு இளம் வயது பெண்களே வருவதுண்டு. பெரிய நிறுவனங்கள் இளம்பெண்களை மட்டுமே தங்களது தயாரிப்புகளுக்கு மொடல்களாக ஒப்பந்தம் செய்வதுண்டு. நடிகைகளாக இருந்தால் கூட வயதான பெண்களை மொடலிங்கிற்கு அழைப்பது இல்லை

இந் நிலையில் லண்டனை சேர்ந்த 89 வயது பெண் பிரபல நிறுவனத்தின் மொடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1950ஆம் ஆண்டு முதல் மொடலிங் தொழில் செய்து வரும் இந்த பெண்ணின் பெயர் டாஃபேன் செல்பி. இவர் பெரிய மற்றும் அடர்த்தியான கண் புருவத்தை தரும் தயாரிப்பு ஒன்றுக்கு மொடல் செய்யவுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் செல்பி கையெழுத்திட்டுள்ளதால் இவர்தான் உலகின் மிக வயதான மொடல் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இவருக்கு சுப்பர் மொடல் என்ற பட்டத்தையும் அவரது ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.