பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணியை 82 ஓட்டங்களுக்குள் அடக்கிய இலங்கை 83 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகின்றது.

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முக்கோணத் தொடரில் இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இப் போட்டித் தொடரின் 6 ஆவதும் முக்கியமானதுமான போட்டி இன்று டாக்காவில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் பங்களாதேஷ் அணி சென்றுள்ள நிலையில் அடுத்ததாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது என்பதற்கான போட்டியாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியை  எதிர்த்தாடும், தோல்வியடைந்தால் சிம்பாப்வே அணி ஓட்ட விகிதத்தால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சிம்பசொப்பனமாகத் திகழ 82 ஓட்டங்களுக்குள் பங்களாதேஷின் ஆட்டம் அடங்கியது.

இந்நிலையில் 83 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இலங்கை அணி 2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.