நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை செய்லான் வீதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த வாகானம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.