ஊவா மாகாண சபையில் பதற்றம் ; பொலிஸார் குவிப்பு, தாக்கப்பட்ட உறுப்பினர்கள் வைத்தியசாலையில்

Published By: Priyatharshan

25 Jan, 2018 | 11:28 AM
image

ஊவா மாகாண சபையில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் அங்கு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஊவா மாகாண சபை அமர்வு இன்று இடம்பெறவிருந்த நிலையில், கட்சிதாவிய மாகாணசபை உறுப்பினரான கணேசமூர்த்தி மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஆர்.எம். ரத்னாயக்கவின் வாகனத்தில் ஏறி சபைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மாகாண சபையின் புதிய கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக ஊவா மாகாண சபையில் பொதுமக்கள் கூடியிருந்துள்ளனர்.

ஊவா மாகாண சபைக்குள் கட்சிதாவிய கணேசமூர்த்தி உள்நுழைகையில் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை, அங்கு நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான உபாலி சேனாரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் அம்பியூலன்ஸ் மூலம் பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து ஊவா மாகாணசபை வளாகத்தில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், சபை அமர்வு ஆரம்பமானதும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரொருவர் தாம் சபைக்கு வருவதற்கு பாதுகாப்பு இல்லையெனவும் இராணுவத்தினருடன்  தான் சபைக்கு வரவேண்டுமெனவும் தெரிவித்தார்.

அதையடுத்து புதிதாக மாகாணக் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செந்தில் தொண்டமானும் தமக்கு சபைக்கு வருவதற்கு பாதுகாப்பு வழங்குமாறும் சபையில் தெரிவித்தார்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த முதலமைச்சர் இது தொடர்பில் தான் சட்டபூர்வமான நடடிவக்கை எடுப்பதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறினார்.

சம்பவம் நடந்ததை கேள்வியுற்று அப்பகுதிக்கு விரைந்த அமைச்சர் ஹரீன்பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஊவா மாகாண சபையில் கூடியிருந்த பொதுமக்களுடன் சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியோர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாக செய்தியாளர்  மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14