நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எட்டு இந்திய மீனவர்கள்  நேற்றிரவு  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த எட்டு மீனவர்களும் இரண்டு விசைப்படகுகளுடனும் சட்ட விரோதமாக பிடித்த மீன்கள் மற்றும் மீன் பிடிக்கு பயன்படுத்திய வலைகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு  விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் மீனவர்கள் இன்று யாழ். மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.