பொதுஜன பெரமுன வேட்பாளரின் மீது  டயகம பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கீழ் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்  எஸ்.ராஜ்குமார் மீதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வேட்பாளம் மீது தாக்குதல்  மேற்கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்ரஸின் ஆதரவாளர்கள் சிலர் டயகம பொலிஸாரால் கைது செய்யபட்டபடுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன் கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பலத்த காயங்களுக்குள்ளான எஸ்.ராஜ்குமார் டயகம வேவர்லி தோட்டப்பகுதியைச் சேர்ந்தலரெனவும் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வருவதாகவும் டயகம பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வசித்துவரும் வேவர்லி தோட்டப்பகுதில் மதுபோதையில் வந்த இரு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஆதரவாளர்கள் தன்மீது தாக்குதல் நடத்தியதாக காயங்களுக்குள்ளான பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.ராஜ்குமார் டயகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யபட்ட முறைபாட்டில் இருந்து தெரியவந்துள்ளது.

காயங்களுக்குள்ளான ராஜ்குமாருக்கு வலது காதிலும் வலது கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட குடும்பதகராறு காரணமாகவே  இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட இருவரும் இன்று வியாழக்கிழமை நுவரெலியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.