மன்னார், மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதிக்குள் யானை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டு யானையொன்று குடி மனைக்குள் புகுந்த நிலையில் அப்பகுதியில் உள்ள இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக யானைகள் மக்களின் தோட்டப் பகுதிக்குள் அடிக்கடி புகுந்து தோட்டங்களை நாசம் செய்து வருகிறது. இவ் விடயம் தொடர்பில் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.