(எம்.எப்.எம்.பஸீர்)

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானியை முழந்தாளிடச் செய்து மன்னிப்பு கோரச் செய்தமை, அச்சம்பவம் தொடர்பில் பொய்யான வாக்கு மூலத்தை வழங்க அச்சுறுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆகியோரின் முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த விவகாரம் குறித்த விசாரணைகளுக்கு நாளை காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு,  ஊவா மாகாண கல்விச் செயலஆளர் சந்தியா அம்பன்வெல உள்ளிட்டோருக்கு மனித உரிமைகள் ஆணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஊவா மாகாண கல்விச் செயலாளர் சந்தியா அம்பன்வெல,  மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்நாயக்க, வலய கல்விப் பணிப்பாளர் ரணசிங்க,  பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாகாண சபை ஊழியர்களான  பாலித்த ஆரியவங்ச, பிரசன்ன பத்மசிரி,  அமில கிரிஷாந்த ரத்நாயக்க ஆகியோருக்கே விசாரணைகளுக்கு ஆஜராக நோடிஸ் அனுப்பட்டுள்ளது.