முஸ்லிம்கள் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து ;பதவிகளைத் துறந்தார் ஷபீக் ரஜாப்தீன்

Published By: Priyatharshan

24 Jan, 2018 | 07:21 PM
image

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் தொடர்பில் முகநூலில் வெளியிட்ட கருத்து தொடர்பாக, இன்று  தாருஸ்ஸலாமில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கட்சியின் கொழும்பு மத்தியகுழு அங்கத்தவர்கள் முன்னிலையில் ஷபீக் ரஜாப்தீன் விளக்கம் அளித்தவேளை தனது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

தனது தனிப்பட்ட முகநூலில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கட்சியின் தலைமை தொடர்பில் அநாகரிக வார்த்தைப் பிரயோகங்கள் பாவித்து ஒரு சகோதரர் கருத்து வெளியிட்டபோது, பொறுமையிழந்து, அவருக்கு மாத்திரம் பதிலளித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாகவும் கிழக்கு மாகாண மக்களை எப்போதும் மதிப்பதாகவும் தனது பதிவினால் அசௌகரியங்களை எதிர்கொண்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும்  குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியில் எப்போதும் அத்திபாரமாக திகழும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பங்களிப்பை என்றும் நினைவுகூர்ந்தவனாக, இனிவரும் காலங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்து தொடர்ந்தும் செயற்படுவேன் என்றும் உறுதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34