அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு கோட்டை மற்றும் நுகேகொடை நீதிவான் நீதிமன்றங்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளன.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் நாளை ஏற்பாடுசெய்துள்ள பேரணிக்கே இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலம் நெருங்கும் நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் செல்வதற்கு தடைவிதிக்கபட்டுள்ள நிலையிலேயே பொலிஸாரின் வேண்டுதலுக்கமைய இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகத்துறைப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.