தேசிய திரவப் பெற்றோலிய வாயு (LPG) விநியோக நிறுவனமான, லிட்ரோ காஸ், 2015 ஆம் ஆண்டை சாதனை மிகுந்த இலாபம் பதிவாகிய ஆண்டாக நிறைவு செய்திருந்தது. 

கடந்த ஆண்டின் தேறிய இலாபமாக 6 பில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. சந்தை வளர்ச்சியும் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்களவு பதிவாகியிருந்தது.

சந்தையின் முன்னோடி, தனது வலையமைப்பை நாட்டின் சகல பாகங்களுக்கும் விஸ்தரித்திருந்தது. குறிப்பாக நிறுவனத்தின் 5000க்கும் அதிகமான விற்பனையாளர்களின் மூலமாக இந்த விஸ்தரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷலில முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

 “நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களிலும் லிட்ரோ காஸ் கிடைக்கச் செய்வது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. இதை முன்னெடுப்பதன் மூலம், லிட்ரோ காஸ் உயர்ந்தளவு பாதுகாப்பு நியமங்கள் பேணப்படுவதுடன், தரமான பொருட்கள் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது” என்றார்.

நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளர்  முதித பீரிஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில்,

 “முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் பெருமளவு விலைக்குறைப்பு பதிவாகியிருந்த நிலையில், லிட்ரோ காஸ் புதிய 485,548 இணைப்புகளை ஏற்படுத்தியிருந்ததன் மூலம் தனது சந்தை வாய்ப்பை மேலும் விஸ்தரித்திருந்தது. இதன் காரணமாக 2015 ஆம் ஆண்டு தேறிய இலாபம் பதிவாகிய ஆண்டாக அமைந்திருந்தது. 

6 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தேறிய இலாபமாக பதிவாகியிருந்தது. 2015 இல் அதிகளவு சிலிண்டர்கள் விற்பனையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 209,000 மெட்ரிக் டொன்கள் அளவு எரிவாயு விற்பனையாகியிருந்தது. இதன் மூலம் விற்பனையாகிய அளவுகளின் எண்ணிக்கையும் 22 சதவீதத்தால் அதிகரித்து சாதனையாக பதிவாகியிருந்தது.”

நாம் தொடர்ந்தும் எமது ஊழியர்களின் மீது முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதுடன், எமது பெறுமதி சங்கிலித்தொடரில் பாதுகாப்பு பேணப்படுவதை உறுதி செய்வோம். சிறந்த தயாரிப்பை வழங்கும் வகையில் எமது சிலின்டர் புதுப்பிப்பு வசதிகளை மேம்படுத்தியிருந்தோம். இந்த மேம்படுத்தல்கள் காரணமாக லிட்ரோ காஸின் தரம் மற்றும் நியமங்கள் மேம்படுத்தப்படும்” என பீரிஸ் குறிப்பிட்டார்.

நிறுவனத்தினுள் தொடர்ச்சியாக அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தனது ஊழியர்களின் நலனில் தொடர்ந்தும் லிட்ரோ காஸ் கவனம் செலுத்தவுள்ளது. 2015 இல் பல ஊழியர்கள் நிறுவனத்தினுள் பதவி உயர்வுகளை பெற்றுக் கொண்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதன் மூலம் அவர்களின் சிறந்த ஆளுமைகளுக்கு உரிய வெகுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

லிட்ரோ காஸ் ஒப்பற்ற வகையிலான பாதுகாப்பு பதிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. “பாதுகாப்பு என்பது எமது பிரதான குறிக்கோள். நாம் திரவப் பெற்றோலிய வாயுவை கையாள்கிறோம். கவனமாக கையாளப்படும் நிலையில்,நகரினுள்ளேயும், கிராமப்பகுதிகளுக்கும் இலகுவாக கொண்டு செல்லக்கூடிய எரிபொருள் வகையாக அமைந்துள்ளது” என பீரிஸ் குறிப்பிட்டார்.

2015 இல் நிறுவனம் பூஜ்ஜிய LTIs மற்றும் பாதிப்புகளுடன் மொத்தமாக 888,413 மனித மணித்தியாலங்களை நிறுவனம் பதிவு செய்திருந்தது. நிறுவனத்தின் நவீன வசதிகள் கொண்ட டேர்மினல், நிரப்பும் வசதிகள் மற்றும் வாகனத் தொடர்கள் மூலமாக தொடர்ச்சியான விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. புத்தாக்கங்கள் மற்றும் புதிய சுமையேற்றும் சாதனங்கள் ஆகியவற்றின் அறிமுகத்தின் மூலம் செயற்பாடுகள் அணிக்கு சிறந்த பதிவை மேற்கொள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. வினைத்திறனில் அதிகரிப்பு மற்றும் கட்டமைப்புகளின் திறன் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களை பயன்படுத்தி செயற்படுதல் மற்றும் ஊழியர்களின் ஈடுபாடு போன்றவற்றின் மூலம் மாற்றமடைந்து வரும் வியாபார உலகில் நிறுவனத்தை வினைத்திறன் வாய்ந்த வகையில் திகழச் செய்ய உதவியாக அமைந்துள்ளன. 

முனசிங்க கருத்து தெரிவிக்கையில், 

“சிறந்த மேலாண்மை மற்றும் கட்டுப்பாடுகளின் மீது அதிகளவு முக்கியத்துவம் செலுத்தப்படுகிறது.” என்றார். 2015 இல் ஸ்தாபிக்கப்பட்ட புதிய நிர்வாக சபையின் மூலமாக, சிறந்த மேலாண்மை மற்றும் செயற்பாடுகள் ஆகியன பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், லிட்ரோ காஸ் நாட்டுக்கு அனுகூலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. கூட்டாண்மை துறையில் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2015 பெப்ரவரி மாத நடுப்பகுதியில் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோர் அலுவலக பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

சமூக பொறுப்புகளுக்கமைய, 2015 இல் சமூகத்துக்கு தொடர்ச்சியாக லிட்ரோ காஸ் உதவிகளை வழங்கியிருந்தது. இவற்றின் மூலம் நாட்டின் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனுகூலங்களை அனுபவித்திருந்தனர். ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடற்கரை சூழல் சுத்திகரிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. தூய்மையான திரவ பெற்றோலிய வாயுவை சமையல் வாயுவாக பயன்படுத்துவது தொடர்பில் பின்தங்கிய சமூகங்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது. இந்த ஆண்டிலும் தனது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் நிரப்பும் நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் லிட்ரோ காஸ் டேர்மினல் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. லிட்ரோ காஸின் உரிமையாண்மையின் கீழ் காணப்படும் இரண்டாவது நிரப்பு மற்றும் டேர்மினலாக இது அமைந்திருக்கும். இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சேவைகளை வழங்கும் வகையில் இந்த நிலையம் அமைந்திருக்கும். திரவப் பெற்றோலிய வாயு ஏற்றுமதியை மேற்கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த ஒரே டேர்மினலாக அம்பாந்தோட்டையில் காணப்படும் லிட்ரோ காஸ் டேர்மினல் அமைந்துள்ளது.மேலும், இலங்கையில் சிலிண்டர்கள் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

வியாபாரத்துக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பதுடன், வெளிநாடுகளிலிருந்து சிலிண்டர்கள் இறக்குமதிக்கான செலவீனத்தை குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கும். 

“முதல் தெரிவான நம்பிக்கையான வலுப் பங்காளர்” எனும் நிறுவனத்தின் கொள்கையின் பிரகாரம், லிட்ரோ காஸ், தனது செயற்பாடுகளை பெட்ரோ கெமிக்கல் வியாபாரத்தை பன்முகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் பிரகாரம், இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிப்பதற்கும் லிட்ரோ காஸ் திட்டமிட்டுள்ளது. 

“லிட்ரோ ஃபியெல்ஸ் எனும் வர்த்தக நாமத்தின் கீழ், நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு லிட்ரோ காஸ் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளரும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளனர். 

லிட்ரோ காஸை பொறுத்தமட்டில் 2016 என்பது அதிகளவு ஆர்வமிக்க ஆண்டாக அமைந்திருக்கும். சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மூலமாக லிட்ரோ காஸ் இந்த உயர்ந்த நிலையை எய்தவுள்ளது.