சட்ட விரோத மணல் அகழ்வு : நீதிமன்றம் தண்டம் விதிப்பு.!

Published By: Robert

24 Jan, 2018 | 12:17 PM
image

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு 5 இலச்சத்து 60 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

குறித்த 12 சந்தேக நபர்களும் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜராகியபோது, சட்டத்திற்கு முரணாக வாவியின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் 12 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணம் விதித்து தீர்பளித்தார்.

பொலிஸாரினால் கைப்பற்றபட்ட மணல் அரச உடமையாக்கப்பட்டதுடன் உழவு இயந்திரங்களை விடுவிக்கமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் இவர்களிடம் காணப்பட்டபோதிலும் சட்டத்திற்கு முரணாக வாவியின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து முந்தன்குமாரவெளி மற்றும் புத்தம்புரி ஆற்றுக்குள் மணல் அகழ்வில் ஈடுபட்பட நிலையில் இந்த உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன் சாரதிகளையும் கைதுசெய்து பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37