மிருக உரி­மைகள் குழுக்கள் எச்­ச­­ரிக்கை.!

Published By: Robert

24 Jan, 2018 | 11:16 AM
image

 ரஷ்­யா­வா­னது இந்த வரு­டத்தில்  இடம்­பெறும் உலகக் கிண்ணப் போட்­டி­க­ளை­யொட்டி கட்­டாக்­காலி நாய்­களை  வகை தொகை­யின்றி கொல்லத்  திட்­ட­மிட்­டுள்­ள­தாக  மிருக உரி­மைகள் தொடர்­பான செயற்­பாட்­டா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

மேற்­படி  உலகக் கிண்ண போட்­டிகள் இடம்­பெறும் நகர்­களில் நாய்­களைக் கொல்வ­தற்­கான  கே.ஜி.பி. உத்­தி­யோ­கத்­தர்­களை   நிய­மிப்­ப­தற்­காக சுமார் 1.4  ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான பணத்தை   அந்­நாட்டு அர­சாங்கம் ஒதுக்­கீடு செய்­துள்­ள­தாக நகர மிருக பாது­காப்பு மன்­றத்தின்  பணிப்­பா­ள­ரான  டமி­தெ­ரினா தமித்­தி­றைவா  கூறினார்.

 உலகக்கிண்ண காற்பந்­தாட்ட ஏற்­பாட்­டா­ளர்கள் மேற்­படி  மிருக படு­கொ­லைகள் தொடர்பில் குரு­டர்கள் போன்று இருந்து ரஷ்ய அர­சாங்­கத்­திற்கு எது­வித அழுத்தமும் கொடுக்­கா­துள்­ள­தாக  அவர் தெரி­வித்தார். அந்த  மன்­றத்­தினால்   தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள முறைப்­பாட்டில்  பல்­லா­யி­ரக்­க­ணக்­கான  நாய்­களும் பூனை­களும் பற­வை­களும் கொடூ­ர­மான   நஞ்­சூட்டி  கொல்­லப்­ப­ட­வுள்­ள­தா­கவும் இது தொடர்பில் உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

உலகக் கிண்ண போட்­டிகள் இடம்­பெ­ற­வுள்ள 11  நகர்­களில்  நாதி­யற்ற மிரு­கங்­களின்  குருதி  பாய­வுள்­ள­தாக  அந்த முறைப்பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ரஷ்ய   பிரதிப் பிர­த­மரும்  அந்­நாட்டு ஜனா­தி­பதி விளா­டிமிர்  புட்­டினின் முன்னாள்  விளை­யாட்டு  அமைச்­ச­ரு­மான  விதாலி மக்தோ,  உலகக் கிண்ணப் போட்­டிகள் இடம்­பெறும் நகர்­க­ளி­லுள்ள சுமார் 2  மில்­லியன்  கட்­டாக்­காலி  நாய்­களை அடைப்­ப­தற்­காக தற்­கா­லிக   நிலை­யங்­களை  ஸ்தாபிக்க உத்­த­ர­விட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக் ­கது.

இந்­நி­லையில் டமி­தெ­ரினா தமித்­தி­றைவா   தெரி­விக்­கையில்,  நாய்­க­ளுக்­கான நிலை­யங்­களை ஸ்தாபிப்­பதை விடுத்து   'நாய்கள்  கே.ஜி.பி.  மர­ண­தண்­டனைப்  நிறை­வேற்றப்படை'  என அழைக்­கப்­படும்  விசேட ஆயு­தப்­ப­டை­யி­ன­ருக்கு நாய்­களைக் கொல்வ­தற்கு ஏற்­க­னவே கட்­டணம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்தார். இது தொடர்பில்  ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளுடன் உடன்­ப­டிக்கை செய்து கொள்­ளப்­பட்டு பணம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக  அவர் கூறினார்.

அந்தப் பண­மா­னது நாய்­களைப் பாதுகாத்துப் பேணு­வ­தற்குப் பதி­லாக அவற்றை  படு­கொலை செய்து நிரந்­த­ர­மாக மௌன­மாக்கப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக  அவர் கூறினார்.

இதன் பிர­காரம்  அந்த உலகக் கிண்ண விளை­யாட்டப் போட்டி இடம்­பெறும் நகர்­களில் ஒன்­றான எக­டெ­ரின்­பேர்க்­கிற்கு மட்டும்  இந்தப் படு­கொ­லை­க­ளுக்­காக 407,000  ஸ்ரேலிங் பவுண்  நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்  தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17