இந்­தி­யா­வி­லி­ருந்து படகு ஊடாக இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­படும்  ஹெரோயின் போதைப் பொரு­ளினை கொழும்பு முழு­வதும் விநி­யோகம் செய்து வந்­த­தாக கூறப்­படும் வாழைச்சேனையைச் சேர்ந்த மாஸ்டர் என அறி­யப்­படும் நபரை குற்­ற­வா­ளி­யாக கண்ட கொழும்பு  மேல் நீதி­மன்றம் அவ­ருக்கு மரண தண்­டனை அளித்து நேற்று தீர்ப்­ப­ளித்­தது. 

வாழைச்­சே­னையை  சேர்ந்த மாஸ்டர் எனும் ஷேய்க் இஸ்­மாயில் அக்பர் என்­ப­வ­ருக்கே கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி கிஹான் குல­துங்க இந்த தண்­ட­னையை வழங்கி உத்­த­ர­விட்டார். ஹெரோயின் கார­ண­மாக சமூகம் பல்­வேறு அவ­லங்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய நீதி­பதி , அவ்­வா­றான நிலை­மையில் இருந்து சமூ­கத்தை மீட்க  படிப்­பி­னைக்­காக இந்த தண்­ட­னையை வழங்­கு­வ­தாக நீதி­பதி மரண தண்­ட­னையை அளித்து திறந்த நீதி­மன்றில் தெரி­வித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி முகத்­து­வாரம் ரஜ­மல்­வத்­தையில் வைத்து 51.88 கிராம் ஹெரோ­யி­னுடன், உடன் வைத்­தி­ருந்­தமை, வர்த்­தகம்  செய்­த­மைக்­க­மைய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் பிர­தி­வாதி கைது செய்­யப்­பட்டு சட்ட மா அதி­பரால் வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே விசாரணைகளில் பிரதிவாதி குற்றவாளியாக காணப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.