( லியோ நிரோஷ தர்ஷன் )

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கெதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், குறித்த நிகழ்வில் தேசியக் கொடியேற்றாது அந்த சந்தர்ப்பத்தை தவிர்த்துக்கொண்டுள்ளார்.

நல்லிணக்கம் எனக்கூறிக்கொண்டு இவ்வாறான குரோதத் தன்மையை வெளிப்படுத்தியமைக்காக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கெதிராக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.