கொலன்னாவையில் இருந்து ஹோட்டலொன்றுக்கு எடுத்துச்செல்லப்பட்ட உலை எண்ணெய் (Furnace Oil) பவுஸரை பெற்றோலியக் கூட்டுத்தாபன விசேட புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.

குறித்த பவுஸரில் இருந்த உலை எண்ணெய் (Furnace Oil) இரசாயனப் பரிசோதனைக்கமைய தரமற்றவை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் பவுசர் ஹோட்டலை நோக்கி செல்லும் வழியிலேயே உலை எண்ணெயில் (Furnace Oil)  தரம் குறைந்த எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாகவும்  குறித்த எண்ணெய் பவுஸர் செல்லவேண்டிய வழியில் செல்லாது வேறுவழியூடாக சென்று நீண்ட நேரம் ஒரு இடத்தில் தரித்து நின்றுள்ளதாகவும் விசேட புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

“எரிபொருள் கலப்படம் செய்து விற்பனை மேற்கொள்வது தொடர்பாக தெரியவந்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிப்பதுடன், 0728870624 மற்றும் 0777748417 தொடர்பை ஏற்படுத்தி  மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.